tamilnadu

img

ஏக்நாத் ஷிண்டே காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பினார் போட்டுடைத்த சஞ்சய் ராவத்

சிவசேனா தலைவரும், மகாராஷ் டிரா துணை முதலமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே முன்பு காங்கிரஸ்  கட்சியில் இணைய விரும்பினார் என  சிவசேனா (உத்தவ்) கட்சியின் நாடாளு மன்ற குழு தலை வர் சஞ்சய் ராவத்  போட்டுடைத்துள் ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறு கையில்,”ஏக்நாத் ஷிண்டே கடந்த  காலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா  காந்தியின் அரசியல் செயலாளரான மறைந்த அகமத் படே லுடன் நேரடி தொடர்பில்  இருந்தார். காங்கிரஸ் கட்சியிலும் ஏக்நாத் ஷிண்டே  இணைய விரும்பினார். அந்த காலகட்டத்  தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் நான் நன்கு அறிவேன். அகமத் படேல் இன்று நம்மிடையே இல்லாததால், இதை  உறுதிப்படுத்த முடியாது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் இதைப் பற்றி  மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பிரித்விராஜ் சவா னிடம் கேட்டு அறியலாம்” என அவர் கூறினார். சஞ்சய் ராவத் பேச்சு மகாராஷ்டிர அர சியலில் பரபரப்பையும், பாஜக கூட்ட ணிக்குள் சலசலப்பையும் ஏற்பட்டுள் ளது. எனினும் ஷிண்டேவின் நெருங்கிய உதவியாளரான நரேஷ் மஹ்ஸ்கே சஞ்சய் ராவத்தின் கூற்று தவறானது என  மறுத்துள்ளார்.