கனவும் அர்த்தமும்
அடகுக் கடை, கனவில் வருகிறதா? பள்ளிக் கட்டணம் உன் பிள்ளைக்குக் கட்டும்நாள் வந்துவிட்டதாய் அர்த்தம் ஜவ்வு மிட்டாய் கனவில் வருகிறதா? சீரியல் அதிகம் நீ பார்க்கிறாய் எனப்பொருள் முதியோர் இல்லம் கனவில் வருகிறதா? உன் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கும் மிக்ஸியும் அம்மியும் கனவில் வருகிறதா? நிச்சயம் உன் தலையில் மிளகாய் அரைப்பார்கள் இன்னோவா கார் கனவில் வருகிறதா? இன்னொரு கட்சி நீ தாவப் போகிறாய் கனவில் சுடுகாடா? காவல் நிலைய சித்திரவதையில் உன் கதை முடிந்திடும் அண்டாவில் அல்வா கிண்டும் கனவா? பாராளு மன்றத்தில் பட்ஜெட் தாக்கல் நடக்கும் எனப் பொருள்