டாக்டர் சாந்தா நினைவு அருங்காட்சியகம் திறப்பு
சென்னை, ஏப்.23 - உலகப் புகழ்பெற்ற புற்று நோயியல் மருத்துவர் சாந்தா 11.3.1927 அன்று பிறந்தார். சென்னை மயிலாப்பூர் - தேசிய பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, 1949 ஆம் ஆண்டு தனது மருத்துவப் பட்டப் படிப்பு மற்றும் 1955 ஆம் ஆண்டு மகளிர் மருத்துவம் மற்றும் மகப் பேறியல் துறையில் உயர் பட்டப் படிப்பு ஆகியவற்றை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்தார். பிறகு புற்றுநோயியல் துறைக்கு மாறினார். 1955 ஆம் ஆண்டு மருத்துவ அதிகாரியாக புற்றுநோய் நிறு வனத்தில் சேர்ந்த அவர், புகழ்பெற்ற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மற்றும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் தனது பணியைத் தொடங்கி னார். ஏப்ரல் 13, 1955 அன்று முதல் குடி பெயர்ந்து, தனது வாழ்நாள் முழு வதும் அங்கேயே வாழ்ந்துமறைந்தார். டாக்டர் வி.சாந்தா 60 ஆண்டு களுக்கும் மேலாக தனது வாழ்க்கை யை இந்த நிறுவனத்திற்கு அர்ப்பணித்தார். மருத்துவமனை யில் அவர் வாழ்ந்த அந்த இடம் தற்போது அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அடை யாறு புற்றுநோய் மருத்துவமனை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவர் சாந்தாவின் முழு உருவச்சிலை மற்றும் நினைவு அருங் காட்சியகத்தை திறந்து வைத்தார்.