புதுக்கோட்டை, ஜூன் 23- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி யை அடுத்த வெண்ணாவல்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க நிர்வா கக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணி அதிகப்படியான இடங்க ளைக் கைப்பற்றியது. வெண்ணாவல்குடி தொடக்க வேளா ண்மை கூட்டறவு சங்கத் தேர்தலுக்கான போட்டி அரசியல் தலையீடு காரணமாக உரிய காலத்தில் தேர்தலை முறையாக நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. 11 நிர்வாகக்குழு உறுப்பி னர்களுக்கான தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக என மூன்று குழுக்கள் மற்றும் சுயேச்சை கள் என 36 பேர் களத்தில் இருந்தனர். இதில், திமுக கூட்டணியில் பேட்டியிட்ட இரா.மாலதி, க.பரிமளா, வெ.கருப்பையா, கோ.செல்வக்குமார், மு.பூபதி, ரா. செல்லத்தம்பி, ச.தெட்சிணாமூர்த்தி, ம.ராஜ பாண்டியன், சி.ரவிச்சந்திரன், கோ.சிவ சங்கரன் ஆகிய 10 பேரும், அதிமுக கூட்ட ணியில் வெ.சந்திராவும் வெற்றிபெற்றனர். வரும் 26-ஆம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான தேர்தல் நடை பெறும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.