வாலிபர் சங்க விளையாட்டுப் போட்டியினை காண வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை பாராட்டினார். தொடர்ந்து மகளிர் 400 மீ ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்கவிருந்த வீராங்கனைகளை வாலிபர் சங்க விளையாட்டுக்கழகச் செயலாளர் பால்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் டி.கே.ரங்கராஜனுக்கு அறிமுகப்படுத்தினர். அப்போது அவர் “நீங்கள் விளையாட்டில் ஆர்வமாக பங்கேற்று பரிசுகளை வெல்வதற்காக வந்துள்ளீர்கள். அதற்காக உங்களை நான் பாராட்டுகின்றேன். விளையாட்டில் முன்னணியில் இருக்கும் நீங்கள் எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக, அறிஞர்களாக, சிறந்த மருத்துவர்களாக, கல்வியாளர்களாக மிளிர வேண்டும் என வாழ்த்தினார்.
ஆடவர் 400 மீ
ஆடவர் 400 மீட்டரு க்கான (12-வயது) ஒட்டப்பந்தயத்தில் சென்னை ரன்பேர்ட் கிளப்பைச் சேர்ந்த ஜெகதீஷ் 1:07 நிமிடத்தில் கடந்து முதலிடம் பிடித்தார். நெல்லை ரோஸ்மேரி பள்ளி மாணவன் சிவகுரு (1:11 நி) 2-வது இடத்தையும், மதுரை மேலூர் தமிழரசி பள்ளி மாணவன் வீராச்சாமி (1:12 நி) 3-வது இடத்தையும் பிடித்தனர்.
வட்டு எறிதல்
மகளிர் வட்டு எறிதல் (யு-18) பிரிவில் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த ஐஸ்வர்யா முதலிடம் பிடித்தார். திருச்சி ஸ்பார்க் கழக மாணவி தேவதர்சினி 2-வது இடத்தையும், பிரியதர்சினி 3-வது இடத்தையும் பிடித்தனர்.
ஆடவர் 3000 மீ
ஆடவர் 3000மீ ஓட்டத்தில் ஒலிம்பிக் கோல்ட் கிளப்பைச் சேர்ந்த அழகு ஜோதி பந்தய தூரத்தை 9:45 நிமிடத்தில் முதலிடம் பிடித்தார். நெல்லை ரோஸ்மேரி பள்ளி மாணவன் நவீன் குமார் (9:54 நி) 2-வது இடத்தையும், SDAT - சிவகங்கை மாணவன் மோகன்ராஜ் (10:24) 3-வது இடத்தையும் பிடித்தனர்.