tamilnadu

img

காவல் நிலையங்களில் கண்ணியம்: முதல்வர் அறிவுறுத்தல்!

காவல்  நிலையங்களில் கண்ணியம்:

முதல்வர்  அறிவுறுத்தல்!

சென்னை, ஜூன் 30 - காவல் நிலையங் களுக்குப் புகார் கொடுக்க வரும் மக்களிடம் கண்ணியத் தோடு நடந்து கொண்டு அவர் களின் புகார்கள் மீது நட வடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சட்டம் - ஒழுங்கு தொடர் பான முக்கியப் பிரச்சனை கள் ஏற்படும்போது தொடர் புடைய காவல்துறை உயர் அலுவலர்கள் உடனடியாக ஊடகங்களைச் சந்தித்து அந்த பிரச்சனை குறித்து தெளிவாக விளக்கம் அளிப் பது, வதந்திகள் பரவுவதை தடுத்திடவும், காவல்துறை யின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தவும் உதவும். சாதி மற்றும் சமய பூசல்களில் ஈடுபடுபவர்கள், வதந்தி மற்றும் வெறுப்புண ர்வை பரப்பி பொது அமை திக்கு குந்தகம் விளைவிப்ப வர்கள் ஆகியோர் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என்றும் முதல மைச்சர் உத்தரவிட்டுள்ளார்.