மதுரை
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.பொதுமக்கள் மட்டுமல்லாது இதுவரை 17 மக்கள் பிரதிநிதிகளை கொரோனா வைரஸ்மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளது. இதில் 4 முக்கிய அமைச்சர்களும் அடங்கும்.
அவர்கள் பற்றிய விபரம்:
1. ஜெ. அன்பழகன் (திமுக) - சேப்பாக்கம் (திருவல்லிக்கேணி)
2. பழனி (அதிமுக) - ஸ்ரீபெரும்புதூர்
3. அரசு (திமுக) - செய்யூர்
4. காந்தி (திமுக) - ராணிப்பேட்டை
5. நிலோபர் கபில் (அமைச்சர் - அதிமுக) - வாணியம்பாடி
6.செங்குட்டுவன் (திமுக) - கிருஷ்ணகிரி
7. கே.பி. அன்பழகன் (அமைச்சர் - அதிமுக) - பாலக்கோடு
8. தூசி மோகன் (அதிமுக) - செய்யாறு
9. மஸ்தான் (திமுக) - செஞ்சி
10. குமரகுரு (அதிமுக) - உளுந்தூர்பேட்டை
11. வசந்தம் கார்த்திகேயன் (திமுக) - ரிஷிவந்தியம்
12. அம்மன் அர்ஜுனன் (அதிமுக) - கோவை (தெற்கு)
13. கணேசன் (திமுக) - திட்டக்குடி
14 . செல்லூர் ராஜு (அமைச்சர் - அதிமுக) - மதுரை (மேற்கு)
15. தங்கபாண்டியன் (திமுக) - ராஜபாளையம்
16. சதன் பிரபாகரன் (அதிமுக) - பரமக்குடி
17. கார்த்திகேயன் (திமுக) - வேலூர்
மொத்தம் 8 அதிமுக எம்எல்ஏ-களும், 9 திமுக எம்எல்ஏ-களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை சேப்பாக்கம் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்ரீபெரும்பத்தூர் அதிமுக எம்எல்ஏ பழனி, அமைச்சர்கள் கே.பி. அன்பழகன்,செல்லூர் ராஜு, தங்கமணி, செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யாறு தொகுதி அதிமுக எம்எல்ஏ அரசு ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் உட்பட மற்ற எம்எல்ஏ-க்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.