உளுந்தூர்பேட்டை, ஜூலை 23- சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் லட்சுமி யின் நினைவு தினத்தையொட்டி வியாழனன்று (ஜூலை 23) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும், கொரோனா பரிசோதனைகளை விரிவுபடுத்தி தரமான சிகிச்சை அளிக்க வேண்டும், நோயாளிகளுக்கு சத்தான உணவு வகைகளை உரிய அளவின்படி முழுமை யாக வழங்க வேண்டும், அரசு மருத்துவ மனைக்கு வரும் பிறவகை நோயாளி களுக்கு சிகிச்சையளிக்க மறுக்கக்கூடாது, கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் உளுந் தூர்பேட்டை பகுதியில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில் அதற்கேற்றார்போல் மருத்துவர்கள், செவி லியர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோரை பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்டத் தலைவர் ஏ.தேவி, செய லாளர் இ.அலமேலு, நகர செயலாளர் வீ. சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.