மாவட்டத் தலைநகரங்களில் ஏப். 22-இல் கோரிக்கை பேரணி
சென்னை, ஏப். 10 - பத்து அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி ஏப்ரல் 22 அன்று மாவட்டத் தலை நகரங்களில் கோரிக்கை பேரணி நடைபெறும் என்று ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ‘ஜாக்டோ - ஜியோ’ மாநில ஒருங்கிணைப் பாளர்கள் கூட்டம், செவ்வாயன்று (ஏப்.8) சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு எஸ். ஞானசேகரன், சு. குணசேகரன், எம்.பி. முருகையன் ஆகியோர் தலைமை தாங்கினர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. இவற்றை நிறைவேற்றுவதாக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி அளித் தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14-ஆவது மாநில மாநாட்டிலும், 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ வாழ்வாதார கோரிக்கை மாநாட்டிலும் கலந்துகொண்ட முதலமைச்சர், “இந்த ஆட்சி உங்களால் அமையப்பெற்றது. உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நான் மறக்கவில்லை, மறுக்கவில்லை, மறைக்கவில்லை” என்றார். ஜாக்டோ - ஜியோவுடன் மார்ச் 13 அன்று பேச்சுவார்த்தை நடத்திய முதல மைச்சர் நம்பிக்கை அளித்தார். ஆனால், நிதிநிலை அறிவிப்பு ஏமாற்றமாகவே அமைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு கட்ட இயக்கம் நடத்தப்பட்டது. தற்போது, ஏப். 22 அன்று மாவட்டத் தலை நகரங்களில் கோரிக்கைப் பேரணி நடத்த வும், மே 24 அன்று மாவட்டத் தலைநகரங்க ளில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்த வும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் - ஆசிரியர் களின் கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில் நடப்பு கூட்டத்தொடரிலேயே முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு ஜாக்டோ - ஜியோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.