tamilnadu

6 நாட்களுக்குப் பிறகு நாக்பூரில் ஊரடங்கு நீக்கம்

6 நாட்களுக்குப் பிறகு நாக்பூரில் ஊரடங்கு நீக்கம்

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வலியுறுத்தி முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் சொந்த ஊரான மத்திய நாக்பூரியின் சிட்னிஸ்  பூங்கா பகுதியில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத்,  பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா  அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மார்ச் 17 அன்று போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்தப் போராட்டத்தில் முஸ்லிம்  மக்களின் புனித நூலான “திருக் குர் ஆன்” எரிக்கப்பட்டதாக கூறப்படு கிறது. இதற்கு முஸ்லிம் அமைப்பு கள் எதிர்ப்பு தெரிவிக்க, இந்து -  முஸ்லிம் மக்களிடையே வெடித்த மோதல் வன்முறையாக மாறியது. அருகில் இருந்த மருத்துவமனை மற்றும் முஸ்லிம் மக்களின் வீடுகள் மீது இந்துத்துவா குண்டர்கள் தாக்  குதல் நடத்தினர். மேலும் வாகனங் கள், கடைகளையும் தீயிட்டு கொளுத்  தினர். காவல்துறையினர் மீதும் தாக்குதல் வன்முறையை தடுக்க வந்த அதி ரடி படை காவல்துறையினர் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் தடியடி நடத்தி காவல் துறையினர் வன்முறையை ஒடுக்கி னர். இந்த வன்முறையில் 9 பேர் பலத்த  காயமடைந்த நிலையில், 20க்கும்  மேற்பட்டோர் லேசான காயமடைந்த னர். சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்தன. ஊரடங்கு இந்த வன்முறையைத் தொட ர்ந்து மார்ச் 18 முதல் கோட்வாலி, கணேஷ் பேத், தேஷில், லகட்கஞ்ச், பச்பாலி, சாந்தி நகர், சக்கர்தாரா, நந் தன்வன், இமாம்பாடா, யசோதரா  நகர் மற்றும் கபில் நகர் காவல் நிலை யப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்பிறகு, மார்ச் 20ஆம் தேதி நந்தன்வன் மற்றும்  கபில் நகர் காவல் நிலையப் பகுதிகளி லும், மார்ச் 22ஆம் தேதி பச்பாலி, சாந்தி நகர், லகட்கஞ்ச், சக்கர்தாரா மற்றும் இமாம்பாடா பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள கோட்வாலி, தேஷில், கணேஷ்பேத் மற்றும் யசோதரா நகர் காவல்  நிலையப் பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணி முதல் ஊர டங்கு உத்தரவை நீக்கிட நாக்பூர் காவல் ஆணையர் ரவீந்தர் சிங்கால் உத்தரவிட்டார். அதேசமயம் உள்  ளூர் காவல்துறையினரின் உதவி யுடன், பதற்றமான பகுதிகளில் ரோந்துப் பணி தொடரும் என நாக்பூர் காவல்துறையினர் அறிவித்துள்ள னர்.