tamilnadu

img

ஒன்றிய பட்ஜெட்டைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

திருவாரூர், பிப்.4-  ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வை நாசமாக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நலனை வஞ்சித்து, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் உள்ள ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து, மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் டெல்டா மாவட்டங்களில் செவ்வாயன்று நடைபெற்றது.  திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றியம், நகரம் சார்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் திருவாரூர் ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுந்தரய்யா, நகர செயலாளர் எம்.டி. கேசவராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.   சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.கோமதி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  குடவாசல் வி.பி. சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை ஏற்று கண்டன உரையாற்றினார். சிபிஎம் குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், ஒன்றியச் செயலாளர் டி.லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி 
திருத்துறைப்பூண்டி பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகரச் செயலாளர் கே.கோபு தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ், வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம் கண்டன உரையாற்றினார். முன்னதாக பட்ஜெட்டை கண்டித்து மாவட்ட குழு உறுப்பினர்கள் உரையாற்றினர்.  கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.கோபிராஜ் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் கே.சீனிவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினா். நன்னிலம் ஒன்றியம், பேரளம் கடைவீதி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரளம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி. செல்வம் தலைமை தாங்கினார். நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

வலங்கைமான்

கட்சியின் வலங்கைமான் ஒன்றியம் சார்பாக, ஆலங்குடி கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் டி.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். இராதா கண்டன உரையாற்றினார். இதில், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சத்திய பாமா மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நீடாமங்கலம்  நீடாமங்கலம் ஒன்றியத்தில் செயலாளர் ஜான்கென்னடி தலைமையில், ஆர்ப்பாட்டம் நடையெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.காளியப்பன், டி.முருகேசன், எம். குருமூர்த்தி, எஸ்.ராஜா, ஜெ. ராபர்ட்பிரைஸ், கிளைச் செயலாளர்கள் செல்வராஜ், தங்கராஜ், முருகேசன் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர். 

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே. பழனிச்சாமி தலைமை வகித்தார். சி. சோதி பாசு, மாவட்டகுழு உறுப்பினர், சி. செல்லத்துரை, நகரக் குழுச் செயலாளர் ஜெயராமன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.  கும்பகோணம் கும்பகோணத்தில் காந்தி பூங்காவில் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கும்பகோணம் மாநகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர் ம.கண்ணன், கும்பகோணம் மாமன்ற உறுப்பினர் அ. செல்வம், கே.பக்கிரிசாமி, ஆர்.ஜெயக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  பெரம்பலூர்  பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் நகரச் செயலாளர் எ.இன்பராஜ், ஒன்றியச் செயலாளர் பி.பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கநாதன், கலையரசி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எழுத்தாளர் இரா. எட்வின், கருணாநிதி, கோகுல கிருஷ்ணன், ஆட்டோ சங்கம் மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம்

வேப்பூர் பேருந்து நிலையத்தில் குன்னம் வட்டச் செயலாளர் வி.செல்லமுத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.கே. ராஜேந்திரன் கண்டன உரையாற்றினர்.  ஆலத்தூரில் ஒன்றிய செயலாளர் எஸ்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லத்துரை, மாவட்டக் குழு உறுப்பினர் மகேஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். வேப்பந்தட்டையில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.எம். சக்திவேல் தலைமையில் நடைபெற்றம் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.கே. ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  புதுக்கோட்டை  புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னத்துரை கண்டன உரையாற்றினார். கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கவிவர்மன், ஏ.ஸ்ரீதர், எஸ்.ஜனார்த்தனன், டி.சலோமி, மாநகர செயலாளர் எஸ்.பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பொன்னுச்சாமி, அ.மணவாளன் பி.சுசிலா ஆகியோர் பேசினர்.