திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு சிபிஎம் பாராட்டு
திருத்துறைப்பூண்டி, மே 17- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பாராட்டி புத்தகங்கள் வழங்கினார். திருத்துறைப்பூண்டி அருகே, பாமணி அரசு மேல்நிலை பள்ளியில், நவீன்நாத் 572 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், மனுஜா 532 மதிப்பெண் எடுத்து மூன்றாம் இடமும், நகர்மன்றத் துணைத் தலைவர் எம். ஜெயபிரகாஷ் மகன் பிரவீன் கள்ளிக்குடி தனியார் பள்ளியில் 478 மதிப்பெண் எடுத்து மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பாராட்டி புத்தகங்கள் வழங்கினார். தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐவி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், நகர ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பாராட்டினர்.