tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதியாக கோவை மாவட்டம் ரூ. 25 லட்சம் அளிப்பு

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதியாக  கோவை மாவட்டம் ரூ. 25 லட்சம் அளிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டு நிதியாக, கோவை மாவட்டம் முழுவதும், வீடு, வீடாகவும், தொழிலாளர்களிடத்திலும் உண்டியலேந்தி வசூலிக்கப்பட்ட ரூ. 25 லட்சம் நிதியை மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம், கட்சியின் கோவை மாவட்டத் தலைவர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், மாநிலக்குழு உறுப்பினர் அ. ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. இராமமூர்த்தி, எம்.கே. முத்துக்குமார், எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே. மனோகரன், கே. அஜய் குமார், கே.எஸ். கனகராஜ், வி. தெய்வேந்திரன், வி. சுரேஷ், என்.ஆர். முருகேசன், என். ஆறுச்சாமி, வி.ஆர்.  பழனிச்சாமி, ஆர். கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.