tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய சிறப்புக் கருத்தரங்குகள்

சிபிஎம் அகில இந்திய சிறப்புக் கருத்தரங்குகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூரில் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்தியக்குழு உறுப்பினர் முனைவர் விஜு கிருஷ்ணன் உரையாற்றினார். மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், ஆர்.சி.பழனிவேலு, கோ.நீலமேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாட்டையொட்டி வேலூர் - திருப்பத்தூர் மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மாநாட்டு நிதி இரண்டாம் தவணை ரூ.3,63,521-ஐ மாநில செயலாளர் பெ.சண்முகத்திடம் மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.ஆறுமுக நயினார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தயாநிதி, ஏ.நாராயணன், கே.சாமிநாதன், பி.காத்தவராயன், செ.ஏகலைவன், கே.ஜே.சீனிவாசன், எஸ்.பரசுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.