tamilnadu

தூக்குத் தண்டனை சிறைவாசிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

மதுரை, மார்ச் 11- திருநெல்வேலியில் வன்கொ டுமை மற்றும் கொலை வழக்கில் இரு வருக்கு தூக்குத் தண்டனை விதிக்  கப்பட்டதை உறுதி செய்யக்  கோரிய வழக்கில், தண்டனை பெற்ற இருவரையும் நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தர விட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழ்செல்வி, கடந்த 2008-ஆம் ஆண்டு அவரது வீட்டு மாடியில் படு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  அவரது வாயினுள் துண்டை திணித்து நைலான் கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.  இதில் வசந்த் மற்றும் ராஜேஷ் ஆகி யோர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த  திருநெல்வேலி மாவட்ட மகளிர் நீதிமன்றம் கொலைக் குற்றம் உறுதி செய்யப்பட்ட ராஜேஷ், வசந்த் இரண்டு பேருக்கும் தூக்கு  தண்டனை வழங்கி உத்தர விட்டது.  காவல் ஆய்வாளர் தரப்பில் இந்தத் தண்டனையை உறுதி செய்யக்கோரி உயர்நீதிமன்ற மது ரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை செவ்வாயன்று விசா ரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, இருவரை யும் மார்ச் 17-ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.