tamilnadu

img

முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல்

 சென்னை, அக்17 -  சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் திங்களன்று (அக்.17) காலை 10 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தே. ஜெனார்த்தனன், கோவை தங்கம், எம்.ஏ.ஹக்கீம், அமீது இப்ராகிம், கே.கே. வீரப்பன், ஏ.எம். ராஜா, எஸ்.பி. பச்சையப்பன், எஸ்.புருசோத்தமன், பெ.சு. திருவேங்கிடம், பே.தர்மலிங் கம் ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. விடுதலைப் போராளி அதனைத்தொடர்ந்து, இந்தி யாவை பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்க 1943 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் இந்தி தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படையில் இணைந்து கடுமை யான நெருக்கடிகள் மிகுந்த சூழ்நிலை யிலும், நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி, ராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர குமரன் சேது பதி, இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத், மலேசிய காங்கிரசின் முன்னாள் தலைவர் எஸ்.சாமுவேலு. மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவரும் மூன்று  முறை உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராகவும் 10 முறை சட்ட மன்ற உறுப்பினராகவும் 7 முறை மக்க ளவை உறுப்பினராகவும், ஒன்றிய அமைச்சராகவும் பணியாற்றிய முலாயம் சிங் யாதவ், தமிழ்நாடு சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி இரா. முத்தையா ஆகி யோரது மறைவுகள் குறித்தும் பேர வைத் தலைவர் அப்பாவு தீர்மானம்  கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்க ளும் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு, நாள் முழு வதும் பேரவை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டது.