சென்னை, நவ. 1 - சமையல் எரிவாயு (LPG) விலைகள் ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படு வது வழக்கமாகி விட்டது. அதன்படி வர்த்தகப் பயன்பாட்டுக் கான எரிவாயு விலை, வெள்ளியன்று (நவ.1) சிலிண்டர் ஒன்றுக்கு 61 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ஆயிரத்து 964 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயரும் போது சமையல் எரிவாயு உருளையின் விலைகளை உயா்த்துகிறோம் என்பது எண்ணெய் நிறுவனங்களின் வாதம். ஒன்றிய பாஜக அரசும் அதையே வழிமொழிந்து வந்தது. ஆனால், கச்சா எண்ணெய் விலை தற்போது குறைந்து வரும் நிலையிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பது, வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நான்காவது மாதமாக வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால், ஹோட் டல்கள், பேக்கரிகள், தேநீா் கடைகளில் விற்கப்படும் உணவு வகைகளின் விலைகளையும் உயர்த்த வேண்டியது வரும், இது தொழிலில் பாதிப்பை ஏற் படுத்தும் என்று வணிகர்கள் தெரிவிக் கின்றனர்.