திருவனந்தபுரம், ஜுலை 7- கேரள அரசின் லைப் மிஷனுடன் கூட்டுறவுத்துறை இணைந்து நில மற்றவர்களுக்கு இரண்டாயிரம் அடுக்குமாடி வீடுகள் கட்டி தரும் என அம்மாநில கூட்டுறவு மற்றும் தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். திருவல்லா நகர கூட்டுறவு வங்கி யின் புதிய கட்டடத்தை திறந்து வைத்து அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேசியதாவது: கேரள வங்கி செயல்பாட்டுக்கு வரு வதைத் தொடர்ந்து வங்கித்துறையின் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு கேரளத்தின் கூட்டுறவு அமைப்புகள் வலுப்பெறும். ரூ.26 ஆயி ரம் கோடி கையிருப்பு உள்ள கூட்டு றவுத் துறையை தகர்க்க நடந்த முயற்சி களை அமைப்பு ரீதியாக சந்தித்து மீட் டுள்ளோம். ரூ.50ஆயிரம் கோடிக்கும் அதிகமான கையிருப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் பெற முடிந்தது சாதனை யாகும். இதர வங்கித்துறைகள் மேற் கொள்ளும் அனைத்து சேவைகளும் கூட்டுறவு வங்கிகளிலும் வழங்கப்படு வதாக அமைச்சர் தெரிவித்தார்.