ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து
புதுப்பட்டினத்தில் சிஐடியு ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட் டம், சீர்காழி அருகேயுள்ள புதுப்பட்டினம் கடைவீதி யில் மீன்பிடி தொழிலா ளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் சங்கத்தின் (சிஐ டியு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஒன்றிய மோடி அரசு கொண்டு வரும் மீனவ மக்களை அழிக்க கூடிய ஹைட்ரோகார்பன் திட் டத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட துணைத் தலை வர் வி.கே.வள்ளல் தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் எம்.நாகவள்ளி, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.மாரியப்பன், புளியந்துறை ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஏ. நேதாஜி, சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சிவிஆர்.ஜீவானந்தம் ஆகி யோர் உரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் ஆர். ஜெயமாலா, எம்.மகேஸ் வரி, கே.ஜனகர் பூபதி, அசோக்குமார் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.