கேள்வி: வாராந்திர வேலை நேரத் தை 90 மணி நேரமாக உயர்த்துவது குறித்த எல்&டி குழுமத்தின் தலைவர் சுப்பிரமணியனின் கருத்து குறித்து...?
பதில்: அவரது கம்பெனி ஊழியர்களின் கூட்டத்தில் பேசும்போது உலகில் டாப் நிலையை இந்தியா அடைய வேண்டுமென்றால் வாரம் 90 மணி நேரம் உழைக்க வேண்டுமென கூறி யுள்ளார். அதோடு மட்டுமல்லாது வீட்டில் உட்கா ர்ந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என வினவியதோடு உங்கள் மனைவியை எவ்வளவு நேரம்தான் உற்றுநோக்கி பார்த்துக் கொண்டு இருப்பீர்கள் எனவும்; அவர்கள்தான் உங்களை எவ்வளவு நேரம் பார்த்து கொண்டு இருப்பார்கள் எனவும் தொழிலாளர்களைப் பகடி செய்துள்ளார். இது சட்டவிரோதமானது மட்டுமல்ல; வேலைக்கும், வாழ்வுக்குமான சமநிலையில் ஒரு அசமத்துவத்தை உருவாக்கி மனித உயி ருக்கே ஆபத்தை விளைவிக்கும் ஒரு அபத்த மான முன்மொழிவாகும். மேலும், பெண்களை இழிவாக பாவிக்கும் பெண் வெறுப்பு (misogyny) பேச்சாகும்.
கேள்வி: இதேபோன்று சமீபத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்கள் வாராந்திர வேலை நேரத்தை 70 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தாரே...
பதில்: வேலை நேரத்தை நீட்டித்து இந்திய உழைப்பாளிகளின் இரத்தத்தை உறிஞ்சிக்குடிக்க பெருமுதலாளிகள் மத்தியில் அயோக்கியத்தனமான ஒரு போட்டி நிலவுகிறது. நாராயண மூர்த்தி அவர்களின் கருத்து முற்றிலும் அறிவியல் ரீதியாக தவறானது. இது முதல் முறையல்ல - 2020ல் 60 மணி நேர வேலை வாரம் வேண்டும் என்று கூறினார். அவரது வாதங்கள் தொழி லாளர் உற்பத்தித்திறன் மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சி குறித்த தவறான புரிதலில் இருந்து வருகிறது. மோடி ஆட்சியின் கொள்கைகளை பிரதி பலிக்கும் கருத்துக்கள் இவை.
கேள்வி: நாராயண மூர்த்தியின் இந்த கருத்துக்கு கார்ப்பரேட் துறை யில் இருந்து என்ன மாதிரியான எதிர் வினைகள் வந்துள்ளன?
பதில்: உடனடியாக ஓலா நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் மற்றும் ஜேஎஸ்டபிள்யு (JSW) குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிந்தால் போன்றோர் மூர்த்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இது வர்க்க ரீதியான ஒற்றுமையைக் காட்டுகிறது. தற்போது எல் அண்ட் டி (L&T) நிறுவனத்தின் தலைவர் 90 மணி நேர வேலை வாரம்வேண்டும் என்று கூறியுள்ளார்.
கேள்வி: இந்தியாவின் தற்போதைய சட்டப்பூர்வ வேலை நேர வரம்புகள் என்ன?
பதில்: இந்திய தொழிலாளர் சட்டங்களின் படி, ஒரு நாளைக்கு 8 மணி நேரம், வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஒரு வார ஓய்வு நாளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் மோடியின் புதிய தொழிலாளர் சட்டங் கள் இந்த அடிப்படை உரிமைகளையே கேள்விக்குறியாக்குகின்றன.
கேள்வி: உலக அளவில் பார்க்கும் போது இந்திய தொழிலாளர்களின் வேலை நேரம் எப்படி உள்ளது?
பதில்: ஐஎல்ஓ (ILO) தரவுகளின்படி, இந்தியர்கள் சராசரியாக வாரத்திற்கு 47.7 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அமெரிக்கர்கள் 36.4 மணி நேரம், தென் கொரியர்கள் 37.9 மணி நேரம், ரஷ்யர்கள் 37.6 மணி நேரம், பிரிட்டன் மக்கள் 36 மணி நேரம், ஜெர்மனி மக்களும் 37 மணி நேரம் வேலை செய்கி றார்கள். அதிக நேரம் வேலை செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
கேள்வி: வரலாற்று ரீதியாக பார்க்கும் போது இந்திய தொழிலாளர்களின் வேலை நேர அளவுகள் எப்படி இருந்தன?
பதில்: 1970ல் ஒரு இந்தியத் தொழிலாளர் ஆண்டுக்கு சராசரியாக 2,077 மணி நேரம் வேலை செய்தார். இந்த எண்ணிக்கை இன்று வரை பெரிதாக மாறவில்லை. அதே கால கட்டத்தில் ஜெர்மன் தொழிலாளர்கள் 1,941 மணி நேரமும், ஜப்பானிய தொழிலாளர்கள் 2,137 மணி நேரமும் வேலை செய்தனர். 2017ல் இந்தியாவில் இது 2,117 மணி நேரமாகவும், ஜப்பானில் 1,738 மணி நேரமாகவும், ஜெர் மனியில் 1,354 மணி நேரமாகவும் இருந்தது.
கேள்வி: Time Use in India - 2019 (இந்தியாவில் நேரப் பயன்பாடு) அறிக்கை என்ன சொல்கிறது?
பதில்: இந்திய அரசின் இந்த அறிக்கை யின்படி, 15-59 வயதுக்குட்பட்ட நகர்ப்புற ஆண் தொழிலாளர் ஒருவர் தினமும் 521 நிமி டங்கள், அதாவது வாரத்திற்கு 60 மணி 47 நிமிடங்கள் நேரடி வேலை மற்றும் அது தொடர் பான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். இது சட்டப்பூர்வ 48 மணி நேர வரம்பை மீறுவதைக் காட்டுகிறது.
கேள்வி: நாராயண மூர்த்தியின் உற்பத்தித்திறன் குறித்த குற்றச்சாட்டு சரியானதா?
பதில்: முற்றிலும் தவறானது. இந்திய அரசின் தரவுகளின்படியே, ஆசிய உற் பத்தித்திறன் அமைப்பின் ஏபிஓ (APO) உறுப்பு நாடுகளில் 2000 முதல் 2013 வரையிலான காலத்தில் சீனாவுக்கு (9.0%) அடுத்தபடியாக மங்கோலியா (5.5%), இந்தியா (5.2%), லாவோஸ் (4.6%), வியட்நாம் (4.4%), கம்போடியா (4.5%), இலங்கை (4.1%), இந்தோனேசியா (3.5%) ஆகிய நாடுகள் உள்ளன. 20 APO உறுப்பு நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
கேள்வி: அதிக வேலை நேரத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என் னென்ன?
பதில்: உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வின் படி, 2016ல் பக்கவாதம் மற்றும் இதய நோய்க ளால் 7.45 லட்சம் மரணங்கள் நீண்ட வேலை நேரத்தால் ஏற்பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டி லிருந்து இது 29% அதிகரித்துள்ளது. வாரத்தி ற்கு குறைந்தது 55 மணி நேரம் வேலை செய்ததன் காரணமாக 3.98 லட்சம் பேர் பக்கவாதத்தாலும், 3.47 லட்சம் பேர் இதய நோய்களாலும் இறந்துள்ளனர்.
கேள்வி: உலகளவில் அதிக நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை எப்படி உள்ளது?
பதில்: உலக மக்கள் தொகையில் 9% பேர் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மேலும் அதிகமான தொழிலாளர்கள் தொழில்சார் நோய்களுக்கும், முன்கூட்டிய மரணத்திற்கும் ஆளாகும் அபாயம் உள்ளது.
கேள்வி: மோடி அரசின் தொழிலா ளர் சட்டங்கள் வேலை நேரத்தை எப்படி பாதிக்கின்றன?
பதில்: மோடி அரசு கொண்டு வந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளிலும் ஆரம்பத்தில் அதிகபட்ச வேலை நேரத்திற்கான வரம்புகளே இல்லை. தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகே சில வரம்பு கள் சேர்க்கப்பட்டன. தொழிற்சாலைகள் சட்டத்தில் இருந்த பத்தரை மணி நேர பரவல் நேரம் இப்போது 12 மணி நேரமாக உயர்த்தப் பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கூட உறுதி செய்யப்படவில்லை.
கேள்வி: பணிப்பாதுகாப்பு மற்றும் பணி நிலைமை சட்டம் (OSH&WC) வேலை நேரம் குறித்து என்ன கூறுகிறது?
பதில்: இந்த சட்டம் அரசுக்கு மிக அதிக அதி காரங்களை வழங்குகிறது. மிகைநேர வேலை யை (overtime) எந்த அளவுக்கும் நீட்டிக்க அனுமதிக்கிறது. மத்திய விதிகள் காலாண்டு க்கு 125 மணி நேர மிகைநேர வேலையை அனு மதிக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மாநில அரசுகள் தினசரி வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த முயன்றன.
கேள்வி: கர்நாடகா மற்றும் தமிழக அரசுகளின் முயற்சிகள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?
பதில்: கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தினசரி வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதாவை நிறைவேற்றியது. காங்கிரஸ் அரசு அதை அமல்படுத்த அறி விக்கை வெளியிட்டிருக்கிறது. ஐடி ஊழியர்க ளின் வேலை நேரத்தை 14 மணிநேரமாக மாற்றி யிருக்கிறார்கள். அதே போன்று தெலுங்கா னா காங்கிரஸ் அரசு வேலை நேரத்தை மாற்றிக் கொள்வதற்கான வழிவகைகளை செய்துள்ளது. தமிழக அரசும் 8 மணி நேர வேலை நேர வரம்பிலிருந்து தொழிற்சாலை களுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை கொண்டு வந்தது. ஆனால் கடும் எதிர்ப்பு களைத் தொடர்ந்து அதை திரும்பப் பெற்றது.
கேள்வி: தற்போதைய நிலையில் தொழிலாளர்களின் பொருளாதார நிலை எப்படி உள்ளது?
பதில்: தொழிற்சாலைகள் ஆண்டு சர்வே ( Annual Survey of Industries) அறிக்கை யின்படி, 1990-91ல் நிகர மதிப்புக் கூட்டலில் ஊதி யங்களின் பங்கு 27.64% ஆக இருந்தது 2022-23ல் 15.94% ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் நிகர லாபத்தின் பங்கு 19.06% இலிருந்து 51.92% ஆக உயர்ந்துள்ளது. குற்ற ஆய்வு பணியகத்தின் தரவுகளின்படி 2022ல் மட்டும் 11,486 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கேள்வி: இந்த நிலையை எதிர் கொள்ள சிஐடியு என்ன நடவடிக்கை கள் எடுக்க உள்ளது?
பதில்: தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணை ந்து கார்ப்பரேட் முதலாளித்துவ வர்க்கத்தின் கொடூரமான முயற்சிகளை எதிர்த்துப் போராட வேண்டும். பணியிடங்களிலும் தேசிய அளவிலும் ஒருங்கிணைந்த எதிர்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டும். உலக தொழிற்சங்க கூட்டமைப்பின் (WFTU) கோ ரிக்கையான ஒரு நாளைக்கு 7 மணி நேரம், வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்ற இலக்கை நோக்கி நாம் போராட வேண்டும்.
கேள்வி: கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த கொள்கைகளை ஏன் முன்வைக் கின்றன?
பதில்: வேலைவாய்ப்புகளை குறைப்ப தற்கும், தொழிலாளர் செலவினை குறைப்ப தற்கும், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் என்ற பெயரில் தொழிலாளர்களை கடுமை யாக சுரண்டுவதற்குமே இந்த முயற்சிகள். இது மோடி அரசின் தொழிலாளர் சட்டங்களு டன் இணைந்த ஒரு திட்டமிட்ட நடவடிக்கை. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது இலா பத்தை பெருக்குவதற்காக தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்க முயல்கின்றன.
கேள்வி: இந்த போராட்டத்தில் தொழிற்சங்கங்களின் பங்கு என்ன?
பதில்: தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்த போராட்டங்கள் மூலமே தொழிலாளர் சட்டங்க ளை இன்னும் அறிவிக்க முடியாமல் தடுத்துள் ளோம். பல மாநிலங்களில் 12 மணி நேர வேலை நாள் திட்டங்களை எதிர்த்து வெற்றி கரமாக போராடியுள்ளோம். தொடர்ந்து இந்த போராட்டங்களை வலுப்படுத்த திட்டமிட்டுள் ளோம். தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சமூக வாழ்க்கை மீதான தாக்குதல்களை எதிர்த்து ஒன்றிணைந்து போராட அனைத்து சங்கங்களும் பல முன் னெடுப்புகளில் இறங்கியுள்ளன.
தொகுப்பு : எஸ்.பி.ஆர்