மதுரை, ஜன.2- குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நடைபெறுவது ஜனநாயகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் எதிராக நடை பெறும் போர். இந்திய மாண்பை பாதுகாக்க மதவெறியர்களுக்கு எதிராக நடக்கும் போர். இந்தப் போரில் இந்தியர்களாகிய நாம் வெல்வோம் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்டேசன் கூறினார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை மதுரையில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:- மோடி அமித்ஷா கூட்டம் பொய்யர்க ளின் கூட்டம். என்ஆர்சி பற்றி பேசவே இல்லை என்று நாடாளுமன்றத்தில் எழுப் பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் சொல்லியிருக்கிறார். ஆனால், இன்றைக்கு பொய் பேசுகிறார். மக்கள் போராடத் தொடங்கியபின் குடி யுரிமைச் சட்டம் குறித்து மக்கள் எழுத்துப் பூர்வமாக அவர்களது கருத்தை தெரிவிக்க லாம் என்று உள்துறை அமைச்சர் கூறு கிறார். தேசவிரோதிகளிடம் தேசபக்தர்கள் ஒருபோதும் சமரசம் கொள்ளமாட்டார்கள். இது எங்கள் தேசம். எங்கள் ஜனநாயகம். குடியுரிமை சட்ட திருத்தம் கொடியது என்று கூறினேன் .இன்றைக்கு இந்தியாவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது .மோடி அரசும், எடப்பாடி அரசும் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன. மாணவர்களே, நீங்கள் கல்வி வளா கத்தின் பகுதியிலிருந்து கற்களைக் கொண்டு எறிந்தால் நாங்கள் குண்டை எறிவோம் என்று பாஜக தலைவர் எச். ராஜா பேட்டி கொடுக்கி றார். தமிழக காவல்துறை அவர் மீது நடவ டிக்கை எடுக்கவில்லை. எச். ராஜா, சொன்ன வுடன் அனைவரும் நடுங்கி போராட்டத்தை விட்டு சென்றுவிடுவோம் என்று நினைத்து விட்டார். நாங்கள் ஒன்றும் சாவர்க்கரின் வாரிசு அல்ல. பகத்சிங், நேதாஜி, மகாத்மா காந்தி போன்றோரின் வாரிசுகள். வாசலில் கோலம் போட்டால் கைது என்ற கோழைத்தனமான நடவடிக்கையில் தமிழக காவல்துறை இறங்கியுள்ளது. மதுரையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்களை சந்தித்து போராட்டத்திற்கு செல்லக்கூடாது என்று பேசியுள்ளனர். இருசக்கர வாக னத்தில் வரக்கூடாது. கட்சிக் கொடியை கொண்டு வரக்கூடாது என்று கூறியுள்ளார்கள் கட்சிக்கொடி அல்ல தேசியக் கொடியையே தூக்கி வந்துள்ளோம். மாவட்ட ஆட்சியரும் தேசியக் கொடியோடு சுற்றி வருகிறார் அவர் மீது உங்களால் வழக்குப் போட முடியுமா? ஆர்எஸ்எஸ்-பாஜக விரித்துள்ள வலை யில் இந்தியர்கள் யாரும் விழமாட்டோம், ஜனநாயகத்திற்கும் காட்டுமிராண்டித் தனத்திற்கும் எதிராக நடைபெறும் போர். இந்திய மாண்பை பாதுகாக்க மதவெறியர்க ளுக்கு எதிராக நடக்கும் போர். இந்தப் போரில் இந்தியர்களாகிய நாம் வெல்வோம். இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.