tamilnadu

img

உயிரினங்களைக் காக்க உதவும் கல்லறைகள் - சிதம்பரம் ரவிச்சந்திரன்

இங்கிலாந்து தேவாலயங்களின் கூட்டமைப்பு (Church of England) கல்லறை வளாகங்களில் உயிரினங்களை தேடும் திட்டத்தை தொடங்கியுள்ளது. தேவாலய வளாகங்களில் அமைந்திருக்கும் கல்லறைகள், சுற்றியுள்ள பகுதிகளில் சிறந்த வாழிடமாகத் திகழும் சிக்கலான அமைப்பையுடைய உயிரினங்களை தேடி கண்டுபிடித்து பதிவு செய்யும் ஆய்விற்கு தேவாலய கூட்டமைப்பு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கற்பாசிகளின் சொர்க்கபூமி

இயற்கையின் அமைதி தவழும் பூமியை  மனிதச் செயல்பாடுகள் சத்தங்கள் நிறைந்ததாக  மாற்றியுள்ள இக்காலத்தில் கல்லறைகள் மட்டுமே இப்போதும் அமைதி தவழும் இடங்க ளாக உள்ளன. இப்பகுதிகள் இறந்தோரை நினைவுபடுத்திக் கொள்ள மட்டும் இல்லா மல் அங்கு வாழும் அதிசயிக்கத்தக்க உயிரி னங்களை கண்டறிந்து பதிவு செய்யவும் தேவா லயங்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்துள் ளது.  இந்த இடங்கள் லைக்கன்கள் (Lichen) எனப்படும் கற்பாசி வகைத் தாவரங்கள் வாழ  உதவும் சொர்க்கபூமியாக உள்ளன. பிரிட்ட னில் உள்ள இரண்டாயிரம் பாசியினங்களில் இது வரை எழுநூற்றுக்கும் மேற்பட்டவை தேவா லய வளாகங்கள் மற்றும் கல்லறைகள் அமைந்துள்ள இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. தேவாலய கணக்கெடுப்பு விவ ரங்களின்படி வேலைப்பாடுடன் கூடிய கல்லறை  கற்கள், மரங்கள், சுற்றியுள்ள புல்வெளிப்பகுதி களில் நூற்றுக்கும் மேற்பட்ட இவ்வகை உயி ரினங்கள் வாழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் தேவாலயங்கள் நாடு முழுவதும் இது குறித்த கணக்கெடுப்பை நடத்திவருகிறது.  உள்ளூரில் இருக்கும் கல்லறைகளை மக்கள்  சென்று பார்வையிட்டு அங்கு காணப்படும் உயி ரினங்களை பதிவு செய்து தேவாலயத்திற்கு  அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படு கின்றனர். கற்பாசிகள் சிக்கலான உயிரின அமைப்பை உடையவை. பூஞ்சை மற்றும் பாசி  அல்லது சயனோபாக்டீரியா (cyanobacteria) ஆகிய உயிரினங்களுக்கு இடையில் ஒன்றுக்கு  ஒன்று உதவிசெய்து வாழும் நெருங்கிய தொடர்பு டைய இவைநிலையான இயல்புடைய தாவ ரங்கள். சூழல் பாதுகாப்பில் இவை மகத்தா னவை. சிறிய முதுகெலும்பற்ற உயிரினங்களின் வாழிட பாதுகாப்பில், மண்ணின் பிஹெச் (pH) கார அமிலத்தன்மை நிலைப்படுத்துதலில், நீர் மற்றும் சத்துகள் உறிஞ்சுதலில், அவற்றின் சுழற்சியில் இவ்வுயிரினங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.ஆனால் அழிந்துவரும் தொன்மையான மரங்கள் போன்றவையே இவற்றின் வாழிடங்களாக உள்ளன. தேவாலய வளாகங்கள், கல்லறைப் பகுதிகளில் காணப்  படும் வெவ்வேறு வகையான பாறைகள், கட்டிட  கட்டுமானப்பொருட்கள் போன்றவை பல இன உயிரினங்களுக்கு நல்லதொரு வாழிடத்தை அளிக்கின்றன. கல்லறைகள் மற்றும் அதில் வேலைப்பாடுகள் செய்து உருவாக்கப்பட்ட கற்கள் பல ஆண்டுகள் யாராலும் தொடப்படா மல் அல்லது தொந்தரவு செய்யப்படாமல்  இருப்பதால் இந்த உயிரினங்கள் குறுக்கீடுகள் எதுவும் இல்லாமல் அமைதியாக வாழ்கின்றன.

வண்ணமயமான பாசிகள்

கல்லறைக் கற்கள் மிக மெதுவாக முதுமை யடைகின்றன. கல் வேலைப்பாடுகளில் உள்ள  கற்கள் வெவ்வேறு காலத்தை சேர்ந்தவை. இத னால் இவற்றின் மேற்பரப்பு கடினமான நிலை முதல் மென்மையான நிலைவரை, நிழற்பகுதி முதல் வெயில், குளிர்ச்சி, காற்றுள்ள இடங்க ளில் உள்ள நிலை, ஈரமானது முதல் உலர்ந்து  வறண்டு போன நிலை வரை உள்ள இடங்களில் காணப்படுகின்றன. சில இடங்க ளில் இவை செங்குத்தாகவும் கிடைமட்டமாக வும் உள்ளன. இதனால் இந்த இடங்கள் பாசிகளுக்கு வேறு பட்ட சூழ்நிலைகளில் தனித்துவம் மிக்க வாழி டத்தை அளிக்கின்றன. “ஒவ்வொரு ஆண்டும் பல தேவாலய அமைப்புகள் இந்த ஆய்வில் பங்கேற்கின்றன. 2023ல் கல்லறைக் கற்களில் வளரும் வண்ணமயமான சில அரிய பாசி  வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த உயிரி னங்களும் செழுமையான படைப்புலகின் ஒரு  அம்சமே.

தேவாலய வளாகங்கள் இறந்தோர் வாழும்  இடம் மட்டும் இல்லை. அவை உயிரினங்க ளும் வாழும் இடங்கள் என்பதை இது நமக்கு  நினைவுபடுத்துகிறது” என்று நார்விச் (Norwich) பிஷப்பும் இங்கிலாந்து தேவாலய கூட்டமைப்பின் சூழல் பிரிவின் தலைவருமான கிரகாம் அஷர் (Graham Usher) கூறுகிறார். கடவுளின் பகுதி (God’s Acre) என்ற அறக் கட்டளை அமைப்பு இந்த ஆய்வுகளை முன்னின்று நடத்துகிறது. இந்த ஆய்வுகளுக்கு ஒரு வாரம் உங்கள் மயானங்களை விரும்புங்கள் (Love Your Burial Ground Week) என்று பெயரி டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த இது போன்ற ஆய்வுகளில் மக்கள் காமன் ஆரஞ்சு கற்பாசி (common orange lichen), நெட்டெட் ஷீல்டு கற்பாசி, (netted shield lichen),  க்ராஃப்ஸ் ஐ ( crab’s eye), டார்க் க்ராட்டில் (dark  crottle) போன்ற எண்பதிற்கும் மேற்பட்ட புதிய  இனங்களை கண்டுபிடித்தனர். “வரும் ஆண்டுகளிலும் மக்களின் பங்கேற்பு  சிறந்த முறையில் அமையும்” என்று அறக்கட்ட ளையின் இயக்குனர் ஹாரியட் கார்ட்டி (Harriet Carty ) கூறுகிறார். இயற்கையான பாறைகள் அமைந்துள்ள இடங்கள் வெகு வாக குறைந்துவிட்டதால் பழைய தேவால யங்களும் கல்லறைகளும் இந்த இன உயிரி னங்களின் பாதுகாப்பில் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்த பாசிகளில் சில மிக மெது வாக வளர்பவை. ஒரு சில ஆண்டிற்கு அரை  மில்லிமீட்டருக்கும் குறைவான அளவு மட்டுமே  வளரும் இயல்புடையவை.

பாறைகளின் வயதை ஒத்த பாசிகள்

ஒரு கற்பாசி தாவரம் அது வளரும் பாறை யைப் போலவே வயதானது. பாசிகளை கண்ட றிய மக்கள் கல் வேலைப்பாடுகள், மரக்கிளை கள், பழைய அறிவிப்புப் பலகைகளை உற்று நோக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கண்டறியப்பட்டவற்றை பற்றிய விவரங்களை தெரிவிக்க ஐ நேச்சுரலிஸ்ட் (iNaturalist) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பாசிகளை இனம் காணவும் அவற்றை புகைப்படம் எடுக்க வும் இந்த செயலி மக்களுக்கு உதவுகிறது. கல்லறைகள் நம்மை விட்டு பிரிந்தோரை நினை வில் வைத்துக்கொள்ளும் இடங்கள் மட்டும் இல்லை. அங்கு வாழும் உயிரினங்களையும் அவை பாதுகாக்கின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.