ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கோடை முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. கிட்டத் தட்ட வெப்ப அலைக்கு நிகராக வெயில் கொளுத்தி வருவதால், மக்கள் நடமாட்டம் இல்லாததால் சித்தூர் சாலைகள் வெறிச்சோடியது.
உத்தரப்பிரதேச மாநிலம் மில்கிபூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளர் சந்திரபானு பஸ்வான், சமாஜ்வாதி வேட்பாளர் அஜித் பிரசாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். “
தில்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீதான வாக் கெடுப்பே தவிர வேறில்லை” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.