சென்னை,டிச.4- அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்ட முன்னாள் ஆளுநர் ரோசய்யா காங்கிரஸ் இயக்கத்தின் தேசியத் தலைவர்களின் அன்பை பெற்றிருந்தவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார். தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல் ்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை(டிச.4) கால மானார். ஆந்திர முதலமைச்சராகவும் தமிழ்நாடு மற்றும் கர்நாடக ஆளு நராகப் பணியாற்றிய அவர் சட்ட மன்ற உறுப்பினர், மேலவை உறுப்பி னர் மற்றும் மக்களவை உறுப்பின ராகவும் இருந்து மக்கள் பணியாற்றி யவர். ஆளுநர்ரோசய்யா மறைவுக்கு தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இரங்கல் செய்தியில், “அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்ட அவர் காங்கிரஸ் இயக்கத்தின் தேசியத் தலைவர்களின் அன்பை பெற்றிருந்த வர். அரசியல் சட்ட மாண்புகள் குறித்து நன்கு அறிந்த அவரது மறைவு பேரிழப்பாகும். ரோசய்யா வின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக் ்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை யும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.