கோத்ரேஜ் ஆலையில் உற்பத்தியை துவக்கி வைத்தார் முதல்வர்
சென்னை அருகே பையனூரில் ரூ.515 கோடியில் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் கோத்ரேஜ் ஆலையின் உற்பத்தியை திங்களன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், குன்னப்பட்டு ஊராட்சியில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் ரூ.515 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை அமைத்து உள்ளது. இந்த ஆலையில் அனைத்து வகை யான சோப்புகள், சரும பராமரிப்புப் பொருட் கள் மற்றும் தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஆலை 50 சதவீதம் அளவுக்கு பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது. இந்த உற்பத்தி ஆலை புத்தாக்கம் மற்றும் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் நிறுவப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டின் போது இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
அடிக்கல் நாட்டப்பட்ட 13 மாதங்க ளிலேயே ஆலை நிறுவப்பட்டது. திங்களன்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலையின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். பின்னர் இந்த தொழிற்சாலையை பார்வையிட்ட அவர் அங்கு பணிபுரியும் பெண்கள், திரு நங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, மக்க ளவை உறுப்பினர் ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, செயலாளர் வி. அருண்ராய், மாவட்ட ஆட்சியர் எஸ்.அருண்ராஜ், கோத்ரேஜ் குழுமத்தின் தலை வர் நாதிர் கோத்ரேஜ், தலைமைச் செயல் அலுவலர் சுதிர் சீதாபதி மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.