tamilnadu

img

அக்னிவீர் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் இந்திய ராணுவத்தின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி மடுக்குமா? முரண்டு பிடிக்குமா?

அக்னிவீர் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் இந்திய ராணுவத்தின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு  செவி மடுக்குமா? முரண்டு பிடிக்குமா?

புதுதில்லி நாடு முழுவதும் பெரும் அதி ருப்தியை ஏற்படுத்திய அக்னி வீர் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று இந்தியத் தரைப்படை கோரிக்கை வைக்கிறது. நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று முன்வருப வர்களுக்கு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு முன்னுரி மைகள் வழங்கப்பட்டு வந்தன. பிற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்க ளுக்கு இருந்த உத்தரவாதமான ஓய்வூதியம் பறிக்கப்பட்டபோது கூட, முப்படை வீரர்களுக்கு அது தொடர்ந் தது. ஆனால், பாஜக ஆட்சி பணியில் சேர்க்கும்போது அக்னிபாதை (அக்னி பாத் - அக்னிவீர்) என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதில் சேரும் வீரர் கள் நான்காண்டு காலத்திற்குப் பணி யாற்றுவார்கள். அவர்களில் இருந்து 25 விழுக்காட்டினர் மட்டுமே நீண்டகாலப் பணியில் சேர்த்துக் கொள்ளப்படு வார்கள். நீண்டகாலப் பணிக்கும் இந்த நான்காண்டுப் பணியைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இது நாடு முழுவதும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. பஞ்சாப்,  ஹரியானா,உ.பி., உள்ளிட்ட மாநிலங்க ளில் பெரும் போராட்டங்கள் நடை பெற்றன. நேபாள நாட்டிலிருந்து தரைப் படைக்கு ஆள் சேர்ப்பது வழக்கமா னதாகும். ஆனால் புதிய திட்டம் வந்த பிறகு, தங்கள் இளைஞர்களை அனுப்ப மாட்டோம் என்று அந்நாட்டு அரசு அறி வித்து விட்டது. இளைஞர்கள் மத்தி யில் மட்டுமல்ல, முப்படைகளிலும் மாற்றுக் கருத்து இருந்து வந்தது. முப் படைகளில் உள்ள வீரர்களின் சரா சரி வயது பற்றிய கவலை தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், அந்தத் திட்டத் தின் கீழ் முதன்முதலாகப் பணியில் சேர்ந்த வீரர்கள், அடுத்த ஆண்டில் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கி றார்கள். இவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இதனால், திட்டம் பற்றிய விவாதம் மீண்டும் முன்னுக்கு வந்தி ருக்கிறது. தரைப்படை முன்மொழிவு பொதுத்தளத்தில் மட்டுமல்ல, ராணுவத்தினரிடம் இந்த விவாதம் நடை பெற்று வருகிறது. அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநி லம் ஜெய்சால்மர் நகரில் நடைபெறும் தரைப்படை கமாண்டர்கள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் இதுவும் சேர்க்கப் பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் நிறைவு செய்த பிறகு 25 விழுக்காட்டினரை மட்டும் நீண்ட காலப் பணியில் சேர்த்துக் கொள்வது என்பதை 75 விழுக்காடாக மாற்ற வேண்டும் என்று முன்மொழிகிறார்கள். இந்த முன்மொ ழிவு குறித்த விவாதம் நடைபெற்று, ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய் வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் இளைஞர் கள் நடத்திய போராட்டங்களைக் கண்டு கொள்ளாத ஒன்றிய அரசு, தரைப்படை யின் கோரிக்கையை என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வழக்கம் போலவே, முரண்டு பிடித்து அப்படித்தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு நகர்வார்களா அல்லது அந்தக் கோரிக்கையின் பின் இருக்கும் நியாயத்தைதான் தரைப்படை சொல்கி றது என்று பார்ப்பார்களா என்ற வினா வும் எழுந்துள்ளது. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு கமாண்டர்கள் மாநாடு முதன்முறையாக நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாநாட்டில்தான் வழக்க மாக நாட்டின் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள புதிய சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் உத்திகள் பற்றி விவாதிப்பார்கள். அக்னிவீரர்க ளுக்கு கூடுதலான எண்ணிக்கையில் பணி நீட்டிப்பு வழங்குவது என்ற கோ ரிக்கையோடு, முப்படைகளுக்கு இடை யிலான ஒருங்கிணைப்பு, ஓய்வு பெற்ற வீரர்களுக்கான நலத்திட்டங்க ளை மேம்படுத்துதல், நடைமுறைப்படுத் தப்பட்டு வரும் சுதர்சன் சக்ரா நடவ டிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம் சங்களை இந்த மாநாட்டில் விவா திக்கப் போகிறார்கள்.  (தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - தில்லிப் பதிப்பு)