கராத்தே மாஸ்டரான ஷிகான் ஹுசைனியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மார்ச் 17 ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்க ளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். மார்ச் 18 முதல் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்ன லுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மே 31 ஆம் தேதிக்குள் ஓய்வுபெற்ற, ஓய்வு பெற உள்ள வர்களின் விவரங்களை மாவட்ட வாரியாக அனுப்ப வேண்டும். அதில் எவ்வித தவறுகளும் நடைபெறாதவாறு பணிகளை விரைந்து முடித்து coseauditsec@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்ற றிக்கை அனுப்பி உள்ளது.
4 சதவீதம் இடஒதுக்கீடு
சென்னை: தமிழ்நாட்டில் 8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாதம் ரூ.3 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.
டெங்கு: மாணவி பலி
வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே முடினாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவ சாயக் கூலித் தொழிலாளியான இவரது மூத்த மகள் சிவானி (13) அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சிவானி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டெங்கு பாதிப்பு இல்லை
சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை டெங்கு பாதிப்பு பெரிய அளவில் இல்லை. தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மகன் விளக்கம்
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்பினார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். ‘வெளிநாடு சென்று வந்ததால் தந்தைக்கு நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டது. தந்தைக்கு, சில வழக்க மான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் நல முடன் உள்ளார்’ என்று ஏ.ஆர்.ரஹ்மான் மகன் விளக்கம் அளித்துள்ளார்.
பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்
சென்னை: சுப முகூர்த்த தினத்தையொட்டி திங்கட் கிழமை (மார்ச் 17) பத்திரப் பதிவுகளுக்கு தமிழ்நாடு முழு வதும் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று பத்திரப் பதிவுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பத்திரப் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகள வில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அந்த நாட்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது. அதன்படி, திங்கட்கிழமை அதிக அளவில் பத்திரப்பதிவு கள் நடைபெறும். எனவே, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவல கங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார் பதிவாளர்கள் இருந்தால் 200-க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும். அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன் களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன் களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.