மதுரை:
மதுரையில் “சிப்காட் ரத்து” செய்யப்பட்டது குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என்று அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் 1500ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமையவிருந்தது. சிப்காட் அமைய உள்ள பகுதிகள் விவசாய நிலங்கள் என்பதால் சிவரக்கோட்டை ,நேசநேரி, கரிசல்காளம்பட்டி விவசாயிகள் எதிர்ப்புத்தெரிவித்தனர்.
இதையடுத்து சிப்காட் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவும் தேர்தல் நேரத்தில் சிவரக்கோட்டையில் சிப்காட் அமையாது என வாக்குறுதி அளித்ததால் பணிகள் தொடங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது.இந்தநிலையில் சிவரக்கோட்டையில் கப சுரகுடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “சிவரக் கோட்டை பகுதி விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க சிப்காட் அமைவதுரத்து செய்யப்படும். விரைவில் அதற் கான அரசாணை வெளியிடப்படும்” என்றார்.அமைச்சர் உதயகுமாரின் அறிவிப்பு, சிவரக்கோட்டையை சுற்றியுள்ள விவசாயிகள் நடத்திய போராட் டங்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்தியபோராட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம்ஆகியவற்றின் பலன் என்றால் அது மிகையல்ல.திருமங்கலத்தில் “சிப்காட் ரத்து” என்ற செய்தியைக் கேட்பதற்கு களத்தில் நின்று போராடியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு உறுப்பினர் கே.அய்யாவு. அவர் கடந்த சில தினங்களுக்கு முன்காலமானார்.