tamilnadu

img

தில்லியில் பிரச்சாரம் ஓய்ந்தது

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக  போட்டியிடுவதால் அங்கு மும்முனை போட்டி நிலவி வருகின்றது

. இந்நிலையில், தில்லியில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் திங்களன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.   இறுதிக்கட்டமாக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளது. அதற்கான வேலைகளைத் தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது. அதேபோன்று வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடப்பதை உறுதி செய்யும் வகையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் தில்லியின் எல்லைகளில் பலத்த பாது காப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. புதன்கிழமை (பிப்ரவரி 5ஆம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது

.  கடந்த 2020ஆம் ஆண்டு நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பி டத்தக்கது.