tamilnadu

img

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி முதல்வர்  ரங்கசாமி  வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி, ஏப்.20- புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துணை நிலை ஆளுநர் அலு வலகத்திற்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெடி குண்டு நிபுணர்கள் ஆளு நர்  மாளிகையை சுற்றி சோதனை செய்தனர். இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் அது புரளி என்பது  தெரிந்தது. இந்த நிலையில், புதுச்சேரி அடுத்து  தமிழக பகுதியான பொம்மை யார்பாளையத்தில் சனிக்கிழமை (ஏப்.19) ஒரு தனியார் விடுதிக்கு இமெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது. இதுகுறித்து, கோட்டகுப்பம் காவல் நிலையத்திற்கு புகார் தெரி விக்கப்பட்டது. இதை யடுத்து, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தனியார் விடுதியின் இணைய  தளத்தில் சோதனை செய்த னர். அப்போது, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சோதனை

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது. தொடர்ந்து, புதுச்சேரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, லாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி இல்லத்திற்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்க ளுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து வெடி குண்டு மிரட்டல் செய்தி புரளி என்பது தெரிய வந்தது. சமீப காலமாக புதுச்சேரியில் வெடிகுண்டு மிரட்டல் செய்தி வருவது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.