tamilnadu

img

பாஜகவின் ஒன்றிய, மாநில அரசுகள் “துன்பத்தின் இரட்டை எஞ்சின்கள்” அகில இந்திய விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் குற்றச்சாட்டு

பாஜகவின் ஒன்றிய, மாநில அரசுகள்  “துன்பத்தின் இரட்டை எஞ்சின்கள்”

அகில இந்திய விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் குற்றச்சாட்டு

ஹரியானா மாநிலம் பதேகா பாத் நகரில் உள்ள பட்டு தானிய மண்டியில், ஹரியானா விவசாயிகள் சங்கத் தின் 15ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில், அகில இந்திய விவ சாய சங்கத்தின் பொதுச் செயலா ளர் விஜூ கிருஷ்ணன், துணைத் தலைவர் இந்திரஜித் சிங், பொரு ளாளர் பி.கிருஷ்ணபிரசாத், ராஜஸ்தான் விவசாய சங்கத் தலை வர் மற்றும் பத்ராவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்வான் பூனியா, சிஐடியு மாநில துணைத் தலைவர் சுரேந்தர் மாலிக், ஹரி யானா விவசாய சங்க செயலாளர் சுமித், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர் ராம் குமார் பஹ்பல்பூரியா மற்றும் வர வேற்புக் குழுத் தலைவர் ஜக்கர் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் விஜூ கிருஷ்ணன் பேசுகையில்,”பாஜக தலைமையிலான ஒன்றிய மற்றும் ஹரியானா மாநில அரசுகள் தங்களது ஆட்சியை “இரட்டை என்ஜின் அரசு” என கூறுகின்றன. ஆனால் உண்மையில் பாஜக வின் ஒன்றிய, மாநில அரசுகள் “துன் பத்தின் இரட்டை எஞ்சின்கள்” ஆகும். சமீபகாலமாக வட இந்தியா முழுவதும் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. இந்த கனமழை வெள்ளம் விவசாயப் பயிர்களை அழித்துவிட்டது. இந்தப் பேரழி வால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு, ஏக்கருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதே போல விவசாயத் தொழிலா ளர்களுக்கும் நியாயமான நிவார ணம் வழங்கப்பட வேண்டும்.  பாஜக அரசு பணக்காரர்க ளுக்கான அரசாக உள்ளது. கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்காக திட்டங் கள் உள்ளிட்ட கோட்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரத்தில் விவசாயிகள் மற்றும் தொ ழிலாளர்கள் தங்களது வாழ்வா தாரத்தை இழந்து வருகின்றனர்” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.