tamilnadu

img

வாக்குறுதிகளை பாஜக ஒரு போதும் நிறைவேற்றியது இல்லை

மும்பை பாஜக தான் கொடுத்த வாக்குறுதி களை ஒருபோதும் நிறைவேற்றி யது இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.   மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே, லாத்தூ ரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர்,  மகா விகாஸ் அகாதி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் எனவும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  மேலும் பாஜக பல தேர்தல் வாக்குறுதி களை கொடுக்கும் ஆனால் அவற்றை அவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள்.  ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைகள் வழங்கப்படும், அனைவரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும், வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை திரும்ப கொண்டு வருவோம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்றெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார்.  அந்த வாக்குறுதிகளை கொடுத்ததை தவிர அவர் வேறு எதுவும் செய்து விடவில்லை. பாஜக கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோதும் நிறை வேற்றுவதே இல்லை. பிரதமர் மோடி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துள்ளார். மகாராஷ்டிராவின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மகாராஷ்டிரா மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவர்களின் கனவுகளை சிதைத்து ஏமாற்றி விட்டது. ஆனால், நாங்கள் சொல்வதைச் செய்கி றோம். நமது மகா விகாஸ் அகாதி  கூட்டணி  வெற்றி பெற்று ஆட்சியில்  அமர்ந்தவுடன் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும். உங்கள் உரிமைகள் அர சியலமைப்பால் மட்டுமே பாதுகாக்கப்படு கின்றன. இந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றி, இங்கு மகா விகாஸ் அகாதி அரசை, மக்களுக்கான அரசை அமைக்க வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டார். மேலும் கூட்டத்தில் உரையாற்றிய போது சிவாஜி, லோகமான்ய திலகர், ஜோதிபா பூலே, சாவித்ரி பாய் புலே, பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற தலைவர்களை குறிப்பிட்ட அவர், அவர் கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு வந்ததை நினை த்து  மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார்.