இளைஞர்களை ஈர்த்த பாரதி புத்தகாலயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18ஆவது மாநில மாநாட்டில் பாரதி புத்தகாலயம் சார்பில் புக்ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது. இந்த புக்ஸ்டாலில் சமூக, அரசியல், பெண்ணியம், வரலாறு, சுயமுன்னேற்றம், அறிவியல் மற்றும் குழந்தைகள் இலக்கியம் தொடர்பான புத்தகங்கள் இருந்தன. எடுத்துக்காட்டாக “ஜாதி ஒழிப்பு”, “பெண்ணியம்”,”இந்துத்துவா அபாயம்” மற்றும் “விஞ்ஞானம்” உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகம் இருந்தன. மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை வாங்கி சென்றனர். மேலும் மாநாட்டு வரவேற்புக் குழு சார்பில் ரூ.50-க்கான கூப்பன், புத்தகம் வாங்குவதற்காக மாநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது.