புதுக்கோட்டை, பிப்.3 - வேங்கைவயல் தண்ணீர்த் தொட்டி யில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதற்கு சாதி ரீதியான சம்பவம் காரணம் அல்ல என்று சிபிசிஐடியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என புகார்தாரர் கனகராஜ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேபோல, அதே பகுதியினரே மனிதக் கழிவைக் கலந்திருக்கிறார்கள் என்பதால் வன்கொடுமை சட்டப் பிரிவுகளை நீக்கி விட்டு, வழக்கு விசாரணையை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு மாற்றக் கோரி, சிபிசிஐடி தரப்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரு மனுக்கள் மீது, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, புகார்தாரர் கனகராஜின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி வசந்தி, சிபிசிஐடி மனுவை ஏற்று வழக்கு விசாரணையை புதுக்கோட்டை குற்றவியல் நீதி