tamilnadu

img

விளையாட்டு

ஆஸ்திரேலிய அணிக்கெதி ரான பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஏற்பட்ட படுதோல்வி காரண மாக இந்திய  வீரர்களுடன் குடும்ப உறுப் பினர்கள் தங்கியிருக்க தடை விதித்து பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது. இதனால் மினி உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்களு டன் தங்கவில்லை. இந்நிலையில், வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் தங்கியிருக்க தடைக்கு எதிர்ப்பு பிசிசிஐ, ஒன்றிய அரசுக்கு விராட் கோலி மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக விராட் கோலி  கூறு கையில்,”குடும்பங்களின் பங்களிப்பை  அனைவருக்கும் புரிய வைப்பது மிக வும் கடினம். வீரர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்கியிருப்ப தன் மூலம் கிடைக்கும் மதிப்பினை பல ரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். போட்டியில் சிறப்பாக செயல்படாத பட்சத்தில், என்னுடைய ஹோட்டல் அறைக்குச் சென்று தனியாக சோக மாக அமர்ந்திருப்பதை நான் விரும்ப வில்லை. நான் இயல்பாக இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என் பதை மேலோட்டமாக நான் கூற வில்லை. உங்களது பொறுப்பினை சரி யாக செய்து முடித்துவிட்டு, குடும்பத்து டன் இயல்பாக பேசி மகிழ்ந்தால் இயல்பு வாழ்க்கையும் பாதிக்காது. குடும்பத்துடன் நேரத்தினை செல விடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினை கொடுக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட நான் தவறுவதில்லை” எனக் கூறினார்.

இந்தியன் வேல்ஸ் ஓபன் டென்னிஸ்

முக்கிய சர்வதேச தொடர் களில் ஒன்றான இந்தியன் வேல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி ஞாயிறன்று அதி காலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தரவரி சையில் 2ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ், தரவரிசை யில் 13ஆவது இடத்தில் உள்ள இங்கி லாந்தின் டிராப்பாரை எதிர்கொண்டார்.தொடக்கம் முதலே அதிரடியாக விளை யாடிய டிராப்பார் 6-1, 0-6, 6-4 என்ற செட் கணக்கில் அல்காரஸுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ரூனே 7-5, 6-4 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள அதிரடிக்கு பெயர் பெற்ற ரஷ்யாவின் மெத்வதே வை எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். முக்கிய சர்வதேச தொடரான இந்தியன் வேல்ஸ் ஓபன் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான மெத்வதேவ், அல்காஸை இரண்டாம் நிலை வீரர்களான டிராப்பார்,  ரூனே வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி இருப்பது டென்னிஸ் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஓவரில் “0” மோசமான வரலாறு படைத்த பஹ்ரைன்

மலேசியா, ஹாங்காங், பஹ்ரைன் ஆகிய அணிகள் முத்தரப்பு டி-20 தொடரில் விளையாடி வருகிறன. மலே சியா நாட்டில் நடைபெறும் இந்த தொடரின் 5ஆவது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் - பஹ்ரைன் ஆகிய அணிகள் மோதின.  தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடி வில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பஹ்ரைன் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்ததால், ஆட்டம் சமனில் நிறைவு பெற்றது. இதனையெடுத்து சூப்பர் கடைபிடிக்கப் பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் கள மிறங்கிய பஹ்ரைன் அணி ஒரு ரன் கூட  எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்தது.  தொடர்ந்து ஒரு ரன் எடுத்த ஹாங்காங்  அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. இதன்மூலம் சூப்பர் ஓவரின் போது  ஒரு ரன் கூட எடுக்காத அணி என்ற மோசமாக சாதனையை படைத்துள்ளது பஹ்ரைன்.