ஆத்தங்கரை விடுதி - வெள்ளாள விடுதி சாலையில் உயர்மட்டப் பாலம் திறப்பு
புதுக்கோட்டை, செப்.13- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி யில் ரூ.11.19 கோடி மதிப்பிலான பல் வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை இயற்கை வளங்கள் துறை அமைச் சர் எஸ். ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் சனிக் கிழமை திறந்து வைத்தனர். இந்நிலையில், வளர்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்ன துரை, “ஆத்தங்கரை விடுதி - வெள் ளாளவிடுதி சாலையில் கட்டப்பட் டுள்ள பாலம், இப்பகுதி மக்களின் நூற் றாண்டுக் கனவு” எனக் குறிப்பிட்டார். மேலும், “0.5 கி.மீ நீளத்தில் அக்னி ஆற்றின் குறுக்கே ரூ.9.88 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்ட இப்பாலமானது வடவாளம் - புதுப்பட்டி சாலையையும், திருக் காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி, பட்டுக்கோட்டை சாலையினையும் இணைக்கும் வகையில் அமைந்துள் ளது. இப்புதிய உயர்மட்ட பாலத்தால் ஆத்தங்கரை விடுதி, வெள்ளாள விடுதி, துவார், கல்லாக்கோட்டை, பல்வராயன்பட்டி ஆகிய கிராமங்க ளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடை வார்கள்” என்று மகிழ்ச்சி தெரி வித்தார். இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும், திட்டம் கொண்டுவர உறுதுணையாக இருந்ததுடன், கந்தர்வக்கோட்டை தொகுதியில் முடிவுற்ற பல்வேறு திட் டப்பணிகளை திறந்து வைத்த மாவட்ட அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோ ருக்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றி யைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.