tamilnadu

கள்ளிக்குடி அருகே எஸ்.பி.நத்தத்தில் கோஷ்டிமோதல்: துப்பாக்கியை காட்டி மிரட்டல்

மதுரை, ஜூன் 25- மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை அடுத்துள்ள எஸ்.பி.நத்தத்தில் நிலத் தகராறு தொடர்பாக இருவேறு தேவாலயங்களைச் சேர்ந்வர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள் ளது. இந்த மோதலில் டி.ஜேக்கப் (74) இரட்டைக்குழல் துப்பாக்கியை எடுத்து மக்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருமங்கலம் காவல் ஆய் வாளர் பரமேஸ்வரி கூறுகையில், “ இரட்டைக்குழல் துப்பாக்கி மிகவும் பழை யது. துருப்பிடித்துவிட்டது. அது பயன் பாட்டில் இல்லை. சம்மந்தப்பட்ட நபர் துப் பாக்கியை தன் தாத்தாவிடமிருந்து பெற்றி ருக்கிறார் என்றார். துப்பாக்கி உரிமம் வைத் துள்ள ஜேக்கப் அதை 2019-ஆம் ஆண்டிற் குப் பின் புதுப்பிக்கவில்லை. கோஷ்டிமோதல் தொடர்பாக காவல் துறையினர் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து பி.எபனேசர் என்பவரை கைது செய்துள்ளனர். காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.