tamilnadu

img

கேள்வி கேள்! - கோவி.பால.முருகு

அந்தப் பள்ளிக்கூடத்திற்கு மாவட்டக் கல்வி அலு வலர் வந்தார்.ஏழாம் வகுப்பிற்குப் போய் ஒரு மாணவனிடம், “கங்கை நதி எங்கே உற்பத்தி ஆகிறது?”என்று கேட்டார்.. அதற்கு மாணவன்  “சார்....தமிழ்ப் பாடத்திலா?சமூக அறிவியலிலா?”என்றான். இந்தப் பதிலைக் கேட்டுக் குழம்பிப் போன மாவட்டக்  கல்வி அலுவலர் “சரி...இரண்டு பதிலையும் சொல்” என்றார். உடனே மாணவன் “சார்...தமிழ்ப் பாடத்தில் என்றால் சிவபெருமான் தலையிலே தோன்றுகிறது.சமூக அறிவியல் பாடத்தில் என்றால் இமய மலையில் தோன்றுகிறது”என்றான்.

இதைக் கேட்ட மாவட்டக் கல்வி அலுவலர்
“எப்படிச் சொல்கிறாய்?”என்றார்

“அய்யா சென்ற வகுப்பில தமிழய்யா கங்கை சிவ பெருமான் தலையில் பிறக்கிறது என்றார்.இந்த  வகுப்புல சமூக அறிவியல் சார் கங்கை இமயமலையில் பிறக்கிறது என்கிறார்.அதனால்தான் இவ்வாறு சொன்னேன்”என்றான். இந்த பதிலைக் கேட்ட மாவட்டக் கல்வி அலுவலர் சிந்தனையில் ‘’ஒருபக்கம் அறிவியலென்றால் மறுபக்கம்  மூடத்தனத்தையும் சேர்த்துவைத்து மாணவர்களைக் குழப்புகிறார்களே...இந்தக் கல்விமுறை எப்போதுதான் மாறுமோ?’,அறிவியல் மனப்பான்மையை வளர்க்காத கல்வியினால் என்ன பயன்’?என்று மனதிலே நினைத்துக்  கொண்டு அந்த மாணவனின் அறிவுக் கூர்மையான பதிலுக்காக அவனைப் பாராட்டிவிட்டு வேறு யாரிட மும் எந்த கேள்வியும் கேட்காமல் வெளியேறி அடுத்த வகுப்புக்குப் போனார். அங்கே தமிழாசிரியை ஒரு பாடலை நடத்திக் கொண்டி ருந்தார்.உள்ளே மாவட்டக் கல்வி அலுவலர் வரு வதைப் பார்த்ததும் அனைத்து மாணவர்களும் எழுந்து  “வணக்கம் ஐயா”என்றனர்.

ஆசிரியரும் வணக்கம் சொன்னார்.நாற்காலியில் அமர்ந்தவர் “என்ன நடத்துறீங்க?”என்று  கேட்டார். ஒரு பாடலை நடத்திக் கொண்டிருக்கிறேன் ஐயா” என்றார். “சரி...தொடர்ந்து நடத்துங்கள்”என்றார். அந்தத் தமிழாசிரியையும் பாடலை இசையோடு பாட  ஆரம்பித்தார். “கல்விக் குரிய கலைமகளே    கலைகள் பலப்பல எமக்கருளே! செல்வம் கொழிக்கும் திருமகளே   சிறப்பாய் வாழ்ந்திட எமக்கருளே!  வலிமைக் குரிய மலைமகளே     வளமுறத் திருவருள் புரிந்தருளே தலையால் வணக்கம் புரிகிவமே     தயவாய்க் காத்தருள் மூவருமே!” என்று பாடி முடித்துவிட்டு விளக்கம் சொல்ல ஆரம்பித்தார். “கலைமகள்னா யாரு தெரியுமா?சரஸ்வதி..அந்த சரஸ்வதிதான் கல்விக்குரிய கடவுள்.புரியுதா?” என்று கேட்டுவிட்டு நிறுத்தினார்.உடனே ஒரு மாண வன் எழுந்து..

“அன்னை(தமிழாசிரியையை அப்படித்தான் மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் அழைப்பார்கள்)கல்விக்கு உரிய கடவுள் சரஸ்வதி என்றால்.நீங்கள் யார்?. அந்த சரஸ்வதி எங்க அப்பா அம்மாவுக்கு ஏன்  கல்வியைக் கொடுக்கவில்லை.அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜையைச் சிறப்பா கொண்டாடு றாங்க..அப்படி இருந்தும் அவங்க எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டாத்தானே இருக்காங்க” என்று கேட்டவுடன் அந்த தமிழன்னை கதிகலங்கிப் போனார். அதைவிட மாவட்டக் கல்வி அலுவலருக்கு தலையே சுற்ற ஆரம்பித்துவிட்டது.மாவட்டக் கல்வி அலு வலர்  இல்லாவிட்டால் தமிழன்னை அவனை அதட்டி உருட்டி “இப்படியெல்லாம் கேக்கத் தெரியுது..ஆனா ஒரு  பாட்ட மனப்பாடம் பண்ணிகிட்டு வான்னா வரமாட்டே.இப்ப அந்த சிலப்பதிகாரத்தில் உள்ள மனப்பாடப் பகுதி யைச் சொல்லு பார்க்கலாம்” என்று திசை திருப்பி உட்கார வைத்திருப்பார். பக்கத்தில வேற அதிகாரி  இருக்காரு என்ன செய்வது  என்று தெரியாமல் தன்னிடம் கேட்ட கேள்விக்கு பதிலை மாவட்டக் கல்வி அலுவலரிடமே திருப்பிவிட்டார். “நீ கேட்ட கேள்விக்கு நம்ம மாவட்டக் கல்வி அலு வலர் ஐயா அவர்களே பதில் சொல்வார்கள்”என்றார். இதை எதிர்பார்க்காத மாவட்டக் கல்வி அலுவலர் கொஞ்ச நேரம் வெலவெலத்துப் போனார்.சமாளித்துக் கொண்டு

“அதுவா...அது ஒன்னுமில்லடா தம்பி நம்ப முன்னோர்கள் எதைக் கண்டு பயந்தார்களோ... எதை  தனக்கு வேண்டும் என்று நினைத்தார்களோ அவற்றை எல்லாம் கடவுளாக்கி விட்டார்கள். கல்வியை செல்வத்தை வீரத்தை வேண்டியவர்கள் அதற்கெல்லாம் கடவுள் வடிவம் கொடுத்துவிட்டார்கள். அவைகளுக்குப் பின்னாளில் கதைகளையும் கட்டிவிட்டார்கள்.உனக்கு நான் என்ன சொல்றேன்னா...இந்தப் புத்தகம் இருக்கே இதுதான் சரஸ்வதி,இதோ இந்தப் பணம் இருக்கே இது தான் லட்சுமி,உன்னுடைய வலிமை இருக்கே அதுதான்  மலைமகள்.கண்ணுக்குத் தெரிகின்ற நீ உணரக்கூடி யதை மட்டும் ஏற்றுக்கொள் மற்றதை விட்டுவிடு” என்று சொல்லிவிட்டு ‘அப்பாடா...தப்பித்தோம்” என்று நினைக்கும் போதே அடுத்த கேள்வியைக் கேட்டான்

“அய்யா புத்தகத்தைப் படிப்பதனால் அறிவு வரும்.உழைப்பதினால் செல்வம் வரும்,உள்ளத்தையும் உடலை யும் பாதுகாத்தால் வலிமை வரும்.அதை விட்டு விட்டு  கடவுளுக்குப் படைப்பதனால் அவைகள் வந்துவிடுமா?” என்று அடுத்த குண்டை எடுத்து வீசினான்.இப்போது மாவட்டக் கல்வி அலுவலர் தெளிவாகிவிட்டார். “நிச்சயமாக வராது..நீ நன்றாகப் படி,நீ மட்டுமல்ல எல்லாருமே படித்தால் அறிவைப் பெறலாம்.உழைத்தால் செல்வத்தைப் பெறலாம்.உடலைப் பேணினால் வலிமை பெறலாம்” என்றவர் மற்ற  மாணவர்களைப் பார்த்து “அந்த மாணவனைப்போல் யார் யாரெல்லாம்  கேள்வி  கேட்கிறார்களோ அவர்கள்தான் பிற்காலத்தில் சுய சிந்தனையாளராக வருவதற்கு வாய்ப்பு உண்டு” என்றார் 

மாணவர்கள் அனைவரும் கைதட்டினார்கள். மாவட்டக் கல்வி அலுவலர்  மகிழ்ச்சியோடு வெளியே வந்தவர் தலைமையாசிரியர் அறைக்குச் சென்று தலை மையாசிரியரின் இருக்கையில் அமர்ந்தவர் இரண்டு வகுப்பிலேயும் மாணவர்கள் கேட்ட கேள்வியைச் சொன்னார். உடனே பதட்டமடைந்த தலைமையாசிரியர்”ஐயா...கோவிச்சுக்காதீங்க..எந்த வகுப்புன்னு சொல்லுங்க..இப்பவே அந்தப் பசங்கள கூட்டியாந்து உங்ககிட்ட மன்னிப்புக் கேட்கச் சொல்கிறேன்”என்றார். மாவட்டக் கல்வி அலுவலர்” சார்...கொஞ்சம் பொறு மையா இருங்க..எனக்கு அந்தப் பையன்கள்மேல துளி கூட கோபம் இல்லை.மாறாக அவர்கள் மேல் எனக்கு  மரியாதையும் மதிப்பும்தான் கூடியது.நான் உங்ககிட்ட  கேக்க வந்தது இப்படி அறிவார்ந்த கேள்விகளை எந்தப்  பள்ளிக்கூடத்திலும் மாணவர்கள் என்னிடம் கேட்ட தில்லை..ஆனால் இங்கே மட்டும் எப்படி?”என்றார். “அதுவா ஐயா.....இங்க ஒரு தமிழாசிரியர் இருக்காரு.அவரு பெரியார் கொள்கையில் பிடிப்பு உள்ளவர்.ஆனா... தமிழ்ல இலக்கண,இலக்கியப் புலமை உடையவர்.திறமையானவர். அதுமட்டுமல்ல கவிதைஎழுதுவார்  மேடைப் பேச்சில் வல்லவர், ஊர்  மக்களால் அறியப்பட்டவர். நான்கூட அவரிடம் ரொம்ப  கடினமா பகுத்தறிவுக் கருத்தப் புகுத்தாதீங்க..மென்மையா இலைமறை காய்மறையா சொல்லுங்க அப்படீம்ப.ஆனா அவரோ”ஐயா..நீங்க கவலைப் படாதீங்க..எனக்கு எப்படிச் சொல்ல வேண்டும் என்பது நன்றாகத் தெரியும்.அதனால எந்தப் பிரச்சனையும் வராது” என்பார்.அதுமாதிரியே இதுவரை எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை.