tamilnadu

img

வழக்கம் போல் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகும் மோடி பிரச்சாரம்!

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்(பிரயாக்ராஜ்) நகரில் நடந்து வரும் கும்பமேளா நிகழ்வில் புதனன்று யமுனையில் நீராடி னார் பிரதமர் மோடி.

 தில்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வேளையில் பிரதமர் மோடி, அர சமைப்பு, சட்டம் தேர்தல் விதிகள் ஆகிய வற்றை மதிக்காமல் வழக்கம் போல் கடவுள் பெயரால் பிரச்சாரம் செய்கிறார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

  மதத்தின் பெயரால் நடத்தப்படும் இந்த மகாகும்பமேளா நிகழ்வில் கார்ப்ப ரேட்டுகள் பல கோடிகள் லாபம் பார்த்து வருகின்றனர். மேலும் வி.வி.ஐ.பிக்கள் மூலம் பல கோடிகள் வருமானம் குவிக்கப்படுகின்றது. இந்நிகழ்விற்கு வரும் அப்பாவி மக்கள் மிக மோசமான சூழலை மட்டுமே எதிர்கொள்கிறார்கள் என தொடர்ந்து உ.பி பாஜக அரசின் உண்மை முகம் அம்பலப்பட்டுக் கொண்டுள்ளது.

கடந்த வாரம் நடந்த கூட்ட நெரிசலில் கும்பமேளாவில் பங்கேற்ற 30 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  பலியான வர்களின் எண்ணிக்கை 30 க்கும் அதிக மாக  இருக்கும். ஆனால் உண்மை எண்ணிக்கை மறைக்கப்படுகிறது என்ற  குற்றச்சாட்டு உள்ளது.

இது பற்றி நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விளக்கம் கேட்ட போது பாஜக முறையாக எந்த பதிலும் கொடுக்க முன்வரவில்லை. இந்த மோசமான சம்பவங்களின் போதெல்லாம் மோடி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை.2019 நாடாளு மன்றத்தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகு உத்தரகண்ட் சென்று தியானம் செய்தார். 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகு  கன்னியாகுமரியில் இரண்டு நாள் தியானம் செய்வதாக நாடகமாடினார். தற்போது  தில்லி தேர்தல் வாக்குப்பதிவின் போது வந்து நாடகம் ஆடுகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.