tamilnadu

ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமம் சஸ்பெண்ட் ரத்து

ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமம் சஸ்பெண்ட் ரத்து

திருப்பதி கலப்பட நெய் விவகாரம்

சென்னை, மே 16 - திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமத்தை  சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன் படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப் படுவதாக கூறி பெரும் சர்ச்சை எழுந்தது. இதை யடுத்து திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமத்தை நிறுத்தி வைத்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவு பிறப் பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து  ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு  தொடரப்பட்டது. இந்த  வழக்கு நீதிபதி வீ.லட்சுமி  நாராயணன் முன்பு விசா ரணைக்கு வந்தது.  அப்போது நெய் மட்டு மின்றி, பால் பொருள் உற்பத்திக்கான உரிமத்தை  சஸ்பெண்ட் செய்ததால்  நிறுவனம் பெரிதும் பாதிப் புக்கு ள்ளானதாகவும், தொழிலாளர்களின் வாழ்வா தாரம் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை தள்ளி வைத்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கானது நீதிபதி லட்சுமி  நாராயணன் முன்பு விசார ணைக்கு வந்தது. ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும்,  இந்த விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யும்படி உணவு பாதுகாப்பு மற்றும்  தர நிர்ணயம் ஆணைய  உரிமம் வழங்கும் அதி காரிக்கு உத்தரவிட்டுள்ளார்.  மறுபரிசீலனை செய்யும் வரை நெய் உற்பத்திக்கான உரிமம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் எனவும், உரி மம் நிறுத்தி வைத்த உத்தரவு  6 வாரங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.