tamilnadu

மனையிடங்கள், லே- அவுட்டுகளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

மதுரை, ஜூன் 24 -  மனையிடங்கள், லே- அவுட்டுகளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப் பிக்கும் முறையை மீண்டும் பயன் பாட்டிற்கு கொண்டுவரக் கோரிய வழக்கில் மாநில வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டு துறை செயலர், நகர மைப்பு திட்ட இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில்,” தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத லே அவுட்களை உரு வாக்கி ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள், புரோக்கர்கள் ஆகியோர் விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு பொது மக்களை மோசடி செய்தனர். இதனைத் தீவிரமாக கருத்தில் கொண்டு அணுகிய உயர்நீதிமன்றம் அங்கீ கரிக்கப்படாத மனையிடங்கள், வரைபட அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள், நிலப்பரப்புகளை பத்திரப்பதிவு செய்வ தற்கு தடை விதித்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத லே அவுட்டுகளை முறைப்படுத்துவது சம்பந்தமாக மாநில நகர் மற்றும் ஊரமைப்புச் அமலாக்கத் துறை இயக்குனர் 2017-ஆம் ஆண்டு அர சாணை ஒன்றை பிறப்பித்தார். அதில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்த www.tnlayoutreg.in என்ற இணையதளத்தில் விண்ணப் பிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த இணைய தளத்தில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்திற்கான அத்தாட்சி சான்று வழங்கப்படும். பின்னர் அந்த சொத்து ஆவணங்களை நேரடியாகவோ தபால் மூலமாகவோ அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். ஆவணங்கள் கிடைத்த பின்னர் அதிகாரிகள் அது தொடர்பான பகுதி தடை செய்யப்பட்ட பகுதி அல்ல என்பதை உறுதி செய்து, அதனைத் தொழில்நுட்ப பிரிவு அனுமதிக்காக சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறையின ருக்கு அனுப்ப வேண்டும். இந்த முறைப்படி தமிழகம் முழுவதும் 35 சதவீத அங்கீகரிக்கப்படாத பிளாட்டுகள் லே-அவுட்கள் வரைமுறை செய்யப் பட்டது. மீதமுள்ள 65 சதவீத அங்கீ கரிக்கப்படாத பிளாட்டுகள், லே-அவுட்டுகள் வரைமுறை செய்யப்பட வில்லை.  இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத மனைகளை முறைப்படுத்த ஆன்லை னில் விண்ணப்பிக்கும் திட்டம் 16.11.2018- ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக சிம்டிஏ (CMDA) அல்லது (DTCP) டிடிசிபி ஆகிய அலுவலகங்களை அணுகு மாறு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நகர் ஊரமைப்புத் துறை துறை ஆணையர் 21.2.2019-இல் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இறுதி தேதியான 3.11. 2018-க்கு முன்பு விண்ணப்பிக்கப்பட்டவையும் பதிவு செய்யப்படாது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அனைவராலும் சிஎம்டிஏ (CMDA) அல்லது டிடிசிபி (DTCP) அலுவலகத்தை நேரில் அணுக இயலாது. அதில் மக்கள்  பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கின்ற னர். ஆன்லைன் பதிவு வசதியை மீண்டும் ஏற்படுத்தாவிட்டால் அனைத்து அங்கீகரிக்கப்படாத லே.அவுட்டுகள், பிளாட்டுகளை முறைப்படுத்துவது இயலாத ஒன்று. அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டுகள் வரைமுறை செய்யப் படாவிட்டால் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற காரணமாக அமையும்.  இது தொடர்பாக பல்வேறு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மனையிடங்கள், லே- அவுட்டு களை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர உத்தர விட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.  இந்த வழக்கை திங்களன்று விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி இது தொடர்பாக மாநில வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டு துறைச்  செயலர், நகரமைப்பு திட்ட இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள னர்.