tamilnadu

img

கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு நம்பிக்கையை கொடுத்துச்சு!

எங்களின் திருமணம் முடிந்து  ஆறு மாதம் கழித்து என்னையும் எனது கணவரையும் அவரது (கணவர்)வீட்டிற்கு அழைத்தார்கள். நாங்கள் மிக  உற்சாகமாக புறப்பட்டுச் சென் றோம். பகலில் குடும்பத்தோடு விருந்து வைத்தார்கள். அன்பாக  கவனித்தார்கள். அன்று இரவு... கணவர் வீட்டின் ஒரு சிறு  அறையில் தங்க வைக்கப்பட் டோம். இரவு 12 மணி இருக்கும் அவ ரின்  தாத்தா கதவை தட்டினார். கதவை  திறந்தேன். வெளியே குளிர் அதிகமாக  உள்ளது. நான் இங்கே படுத்துக்குறேன்  என வராந்தாவை காட்டினார். கதவை  திறந்து வைத்துவிட்டு படுத்து தூங்கி னோம். அதிகாலை 4 மணி இருக்கும் எனது கணவரின் தலையில் சுத்திய லால் ஓங்கி அடித்தார் அவரது தந்தை. அலறல் சத்தம் கேட்டு பதற்றத்துடன் எழுந்தேன். தடுத்த தாத்தாவையும் வெட்டினார். எங்களை விட்ருங்க என  அவரது காலைப் பிடித்து கெஞ்சி னேன். கீழ்சாதி நாயே... உனக்கெல்லாம் என் பையன் மாப்பிள்ளையா? எனக் கேட்டு எனது கணவரை கழுத்தில் வெட்டினார். தடுக்கச் சென்ற என்னை யும் என் இரு கைகளிலும் வெட்டினார். இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந் தோம். மூக்கில் கையை வைத்து மூச்சு  இருக்கிறதா என பார்த்தார். நான்  மூச்சை இழுத்து அடக்கி கொண்டேன். இருவரும் இறந்து விட்டதாக உறுதி  செய்துகொண்டு எங்களை தூக்கி அரு காமையில் உள்ள சுடுகாட்டின் அருகில் போட்டுவிட்டுச் சென்றனர். சுபாஷ் இறந்து விட்டான். பொழுது விடிந்திருந் தது... வயல் காட்டுக்கு வேலைக்குச் சென்ற ஒருவர் என்னை பார்த்து விட்டு தண்ணீர் கொடுத்து 108 ஆம்பு லன்சில் ஏற்றி கிருஷ்ணகிரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

எனக்கு ஒன்பது முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான் தற்போது  உங்கள் முன் சாதி ஆணவக் கொலைக்கு சாட்சியாய் நிற்கிறேன். நான் எம்.எஸ்.சி. முடித்துள்ளேன்; எனது கணவர் முதுகலை பட்டம் பெற்ற வர். இருவருக்கும் பக்கத்து வீடுதான்.  ஓராண்டுதான் இருவரும் காதலித் தோம், ஒருவரை ஒருவர் புரிந்து கொண் டிருந்தோம். வாழ்ந்தால் இவரோடு தான் வாழ்க்கை என முடிவு செய் திருந்தேன். அந்த சாதிவெறி பிடித்த நாய் (அவனை நாய் என்றுதான் கூறுவேன்) சொந்த மகனையே கொலை செய்து  விட்டான். கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யும், விடுதலை சிறுத்தையும் என்னோடு இருந்து என்னை காப்பாற்றினார்கள். தோழர் சுகந்தி (நான்  அம்மான்னுதான் கூப்பிடு வேன்) என் கூடவே இருந்து  உதவி செய்தாங்க. என்னை மேல்படிப்புக்கு படிக்க ஏற்பாடு செய்தாங்க. கம்யூ னிஸ்ட் கட்சி எனக்கு நம்பிக் கையை கொடுத்துச்சு. சாதி என் கணவரை கொன்று விட்டது. இனிமேலும் என் போன்று  யாருக்கும் நடக்கக் கூடாது என்ப தற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். (சிறிது அழுகை, கைகளால் கண்ணீரை துடைத்துக் கொண்டார்...) மீண்டும் பேசினார். அவனுக் காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கூட்டத்தில் பெரும் நிசப்தம் நிலவியது.  பக்கத்து கடைவீதிகளில் நின்றவர்கள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நெல்லையில் நடை பெற்ற பெண்கள் மீதான சாதிய வன் முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தனது கலகக் குரலை எழுப்பினார் தோழர் அனுஷ்யா.

தொகுப்பு:
க.ஸ்ரீராம்
சிபிஎம் மாவட்டச் செயலாளர், திருநெல்வேலி