tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியராக்கி ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சிஐடியு சார்பில் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், சங்கத்தின் தலைவர் ஏ. அன்பரசி, செயலாளர் டி. கலைச்செல்வி, பொருளாளர் கே.வசந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் தேவி, செயலாளர் சுஜாதா, பொருளாளர் மஞ்சு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மஞ்சுளா, அங்கன்வாடி சங்க மாநில துணைத் தலைவரும் சிஐடியூ மாவட்ட தலைவருமான கோவிந்தம்மாள் கலந்து கொண்டனர். சிஐடியூ மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் வாழ்த்தி பேசினார்.