தமிழ் வெப் தொடரின் திரைக்கதையிலும் விளம்பரம் கல்லா கட்ட அம்பானி புதிய வியூகம்
சென்னை, ஜூன் 25- பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் உரிமையாளருமான முகேஷ் அம்பானி 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாட்டின் முன்னணி ஓடிடி நிறுவனமான ஸ்டார் நிறுவனத்தின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரை (Disney+ Hotstar) வாங்கினார். அதாவது தன்னுடைய ஜியோ சினிமா ஓடிடி தளத்தை ஹாட் ஸ்டாருடன் இணைத்து, ஹாட் ஸ்டாரின் 63.16% பங்குகளை வாங்கி னார். அதிகளவிலான பங்குகளை வாங்கியதன் அடிப்படையில் ஹாட் ஸ்டார் அம்பானியின் முழு கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. ஹாட் ஸ்டாரின் பெயர் கூட “ஜியோ ஹாட் ஸ்டார்” என மாற்றப் பட்டது. 36.84% பங்குகளுடன் ஸ்டார் நிறுவனம் ஹாட் ஸ்டாரின் இரண்டாவது உரிமையாளராக மாறி யுள்ளது. ஹாட் ஸ்டார் அம்பானி கைக்கு சென்ற பின் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. விளையாட்டு ஹை லைட்ஸ் ஒளிபரப்பில் கூட விளம்பரம் அதிகமாக செய்யப்படுகிறது. அதே போல 20 நிமிட வெப் சீரியஸிற்கு 6 விளம்பரங்களுக்கு அதிகமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளின் நேரலையின் போதும் கூட வழக்கத்திற்கு மாறாக விளம்பரம் அள்ளி இறைக்கப்பட்டது. ஸ்டார் நிறுவனத்திடம் ஹாட் ஸ்டார் இருந்த போது இப்படி எல்லாம் இருந்ததில்லை. விளம்பரம் மிக குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது ஹாட் ஸ்டார் “ஜியோ விளம்பர ஸ்டாராக” மாறியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது சிரமத்தை சமூகவலைத்தளங்களில் குற்றச்சாட்டாக முன்வைத்து வரு கின்றனர்.