அச்சுதானந்தனுக்கு தீவிர சிகிச்சை தொடர்கிறது!அச்சுதானந்தனுக்கு தீவிர சிகிச்சை தொடர்கிறது!
திருவனந்தபுரம், ஜூலை 1 - கேரள முன்னாள் முதலமைச்ச ரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) திரு வனந்தபுரம் பட்டம் எஸ்யுடி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். கேரள அரசு நியமித்த 7 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு உடனிருந்து கவனித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவ மனைக்கு நேரில் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் எம்.ஏ. பேபி, மருத்துவர் குழுவிடம், அச்சுதானந்தனின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய எம்.ஏ. பேபி, “தோழர் அச்சுதானந்தன் ஆபத்தான நிலையில் இருந்தாலும், அவரது உடல் மருத்துவ சிகிச்சைக்கு நன்றாகவே ஒத்துழைப்பதால், தற்போது அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் டயாலிசிஸைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிவியல் மற்றும் தனது உறுதிமிக்க மனபலத்தின் துணையுடன் நெருக்கடியை அச்சுதானந்தன் சமாளித்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” என எம்.ஏ. பேபி கூறினார். தோழர் அச்சுதானந்தன், கடந்த ஜூன் 23 அன்று நெஞ்சுவலி காரண மாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே, கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்குச் சென்று, அச்சு தானந்தனின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.