tamilnadu

மசாஜ் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை அன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவில் 60.44% வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவுக்கு பிந்தைய அனை த்து கருத்துக்கணிப்புகளிலும் சராசரி யாக 40க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ஆம் ஆத்மி 30க்கும் மேற் பட்ட தொகுதிகளை மட்டுமே கைப் பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சி 2 தொகு திகளைக் கூட வெல்வது சிரமம் என்றும் பாஜகவிற்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில்,  தில்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி யைப் பிடிக்கும் என்ற கருத்துக் கணிப்பு முடிவுகள் மசாஜ் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு  முடிவுகளை போன்றது என ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,”மசாஜ் மற்றும் ஸ்பா நடத்தும் நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தினால், அந்த கருத்துக் கணிப்புகளின் நிலை என்ன வாக இருக்கும் என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள். பிப்ரவரி 8ஆம் தேதி வரை  காத்திருக்குமாறு உங்கள் அனைவரை யும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சி தில்லியில் பெரும்பான் மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும்” என அவர் கூறினார்.