tamilnadu

மினி நிலா

நகரப் பேருந்தின் அளவிற்கு உள்ள ஒரு சிறிய விண்கல் சுமார் இரண்டுமாதம் தன் நேரத்தை செலவழித்து மினி  நிலவாக பூமியை சுற்ற உள் ளது. குதிரைலாட வடிவத்தில் செப்டம்பர் 29-நவம்பர் 25 2024  காலத்தில் பூமியை சுற்றும் இந்த விண்கல் நாசாவின் நிதியுதவி யுடன் செயல்படும் விண்கற் களை கண்டறிந்துஎச்சரிக்கும் அமைப்பு (Asteroid Terrestrial -impact Last Alert System (ATLAS) என்னும்விண்கல் கண்காணிப்பு அமைப்பால் தென்னாப்பிரிக்கா சதர்லாந் தில் (Sutherland)ஆகஸ்ட் 7  2024 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.

மினி நிலவுகள்

2024 பிடி 5 (2024 PT5) என்று  பெயரிடப்பட்ட இந்த விண் கல்லை 1293ல்தொடங்கப்பட்ட ஐரோப்பாவின் மிகப் பழ மையான பல்கலைக்கழகங்க ளில் ஒன்றான மாட்ரிட் கம்ப்ளூ ட்டென்ஸ் டெ (Universidad Complutense de Madrid)ஆய்வாளர்கள் 21 நாட்கள் ஆரா ய்ந்தனர். பூமியின் சுற்றுவட்டப் பாதையை போல சூரியனை சுற்றும் இரண்டாவது நிலை விண்கல் பட்டையைச் சேர்ந்த இது அர்ஜுனா விண்கல் பட்டை யில் இருந்து பூமிக்கு வருகை தருகிறது. இது பற்றிய ஆய்வுக்  கட்டுரை ஏ ஏ எஸ் ஆய்வுக்குறிப்பு கள் ( Research notes ofAAS)  என்ற இதழில் வெளிவந்துள்ளது. இது 56.6 நாட்கள் பூமியை  சுற்றும். இது போன்ற புவி அரு காமைபொருட்கள் (non-Earth objects NEOs) முன்பே  பூமியின் சுற்றுவட்டப்பாதைக் குள் வந்து சென்றுள்ளன என்றா லும் அவற்றில் பல புவியின் சுற்றுவட்டப்பாதையை முழுமையாக சுற்றுவதில்லை. ஆனால் சில பூமியை முழுமை யாக சுற்றி மினி நிலவுகளாக மாறியுள்ளன. 2020 சிடி3 (2020  CD3) என்ற விண்கல் பல ஆண்டு கள் பூமியை சுற்றிய பின் 2020ல்  திரும்பிச்சென்றது.2022 என் எக்ஸ்1 (2022 NX1) என்ற மற்றொரு விண்கல் 1981 மற்றும்  2022ம் ஆண்டுகளில் பூமியின் மினி நிலவாக மாறியது. இது 2051ல் மீண்டும் பூமிக்கு விஜயம்  செய்யும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இப்போது பூமியை சுற்ற  வருகை தரும் 2024 பி டி5 விண்  கல் வேறு சில மினி நிலவுகளை  விட பெரியது. இது 2055ல் மீண் டும் பூமிக்கு வரும். புவி ஈர்ப்பு விசை இந்த விண்கல்லின் சுற்றுவட்டப்பாதையை ஈர்க்கிறது.

இதனால் இந்த விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து தப்ப முடியாத புவி மைய நோக்கு எதிர்மறை ஆற்  றலை (negative geocentric energy) பெறும். புவி சுற்று வட்டப்பாதை ஈர்ப்பில் இருந்து விடுபட்டு சூரியனை சுற்றும் ஆற்றலை (heliocentric energy) அடையும்போது பால்வீதி நட்சத்திர மண்ட லத்தில் உள்ள மற்ற கோள்கள், அருகாமைப் பொருட்களை போல இந்த விண்கல் மறுபடி யும் சூரியனை சுற்ற ஆரம்பிக்கும். பூமிக்கு வருகை தரும் விண்கற்கள் பூமியில் இருந்து  விடைபெற்று சென்றாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு  இது பூமிக்கு அருகில் இருக்கும். அப்போது ஜனவரி 9 2025 அன்று  இந்த விண்கல் பூமிக்கு மிக அரு காமையில் தென்படும். 3,474  கிலோமீட்டர் விட்டம் உள்ள நில வின் அளவுடன் ஒப்பிடும்போது இந்த மினி நிலா 10 மீட்டர் நீளம்  மட்டுமே உடையதால் மிகச்சிறி யது. இதை பைனாகுலர்கள், அமெச்சூர் தொலைநோக்கிகள் வழியாக பார்க்கும்போது மிக  மங்கலாகத் தெரியும். என்றா லும் தொழில்ரீதியாக விண்  வெளியை ஆராயும் நிபுணர் களின் சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் வழியாக இதை நன்கு காணமுடியும். அர்ஜுனா விண்கல் பட்டையில் உள்ள சில விண்கற்கள் மற்ற வற்றுடன் ஒப்பிடும்போது பூமிக்கு அருகில் 4.58 மில்லி யன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இந்நிலையில் இவற்றில் சில பூமிக்கு வருகை தரு கின்றன. இந்த கற்களின் வேகம்  மணிக்கு 3,540 கிலோமீட்டராக உள்ளபோது இவற்றின் பாதை  பூமியின் வலுவான ஈர்ப்பு விசை யால் பாதிக்கப்படுகிறது. அத னால் இவை பூமியின் தற்காலிக நிலவாக மாறுகின்றன” என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் மாட்ரிட்  பல்கலைக்கழக பேராசிரியரு மான கார்லோஃப்ஸ் டிலா ஃபுயெண்டே மார்க்கோஸ் (Carlos de la Fuente Marcos  கூறுகிறார். தற்காலிக நிலவாக மாற பூமிக்கு வரும் இத்தகைய விண்  கற்கள் மூலம் சூரிய குடும்பம், பூமியின் தோற்றம், வரலாறு பற்றிய பல அரிய தகவல்களை நம்மால் பெறமுடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.