பட்டம் என்பது உழைப்பின் அங்கீகாரம் பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவன விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
சென்னை, அக்.27 - பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டம் பெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். மாணவர்களிடையே பேசிய அவர், “மாணவர்களின் கையில் இருக்கும் பட்டம் வெறும் காகிதம் அல்ல; அது உழைப்பின் விளைச்சல், அறிவுக்கும் திறமைக்கும் கிடைக்கும் அங்கீகாரம் ஆகும்” என்று தெரிவித்தார். இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்த மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது என்று குறிப்பிட்ட அவர், ஏழை - எளிய மாணவர்கள் உலகத் தரத்தில் கல்வி பெற, திராவிட முன்னேற்றக் கழக அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார். மாணவர்கள் நல்ல மனிதர்களாகவும், மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாகவும் வளர வேண்டும் என்றும், நேர்மை, நம்பிக்கை, பொறுப்பு போன்ற விழுமி யங்களைக் கைவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். மேலும், மாணவர்கள் உயர உயர வளரும்போது தங்களுக்குக் கீழே இருப்ப வர்களையும் கைதூக்கிவிட வேண்டும்; இதுவே உண்மையான தலைமைத்துவப் பண்பு என்றும் வலியுறுத்தினார். அவர் திருக்குறளில் உள்ள மேலாண்மைப் பாடங்களை எடுத்து ரைத்தார். ‘அறிவுடையார் ஆவது அறிவார்’ என்ற குறளை எடுத்துக்காட்டி, அடுத்து நடக்கப் போவதைக் கணிக்கிறவர்கள்தான் எந்தத் துறையிலும் நிலைத்து நிற்க முடியும்’ என்று வள்ளுவர் சொல்வதாகவும் அவர் விளக்கினார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை செயலாளர் சங்கர், தலை வர் ரவி அப்பாசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
