tamilnadu

img

அங்கன்வாடியில் பிரியாணியும் சிக்கனும் கேட்டு அடம்பிடித்த சிறுவன்

கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் ஷங்கு என்ற சிறுவன், “எனக்கு உப்புமா வேண்டாம். பிரியாணியும் பொரித்த கோழியும் (சிக்கன் - 65) வேண்டும். அங்கன் வாடிகளில் உணவுப் பட்டியல் மாற்றப்பட வேண்டும்” என மழலை பேச்சில் அடம் பிடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த கேரள சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சிறுவனின் வீடியோவை பகிர்ந்து கோரிக்கைக்கு பதில் அளித்து, அவரும் பதில் அளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் தனது  வீடியோவில், “அப்பாவித்தனமாக சிறுவன்  கோரிக்கை வைத்துள்ளான். ஷங்குவின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப் படும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வெவ்வேறு உணவுகள் வழங்கப்பட்டு வரு கின்றன. தற்போது முட்டை, பால் உள்ளிட்ட வை வழங்கப்பட்டு வருகிறது. சிறுவனின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கன்வாடியின் உணவுப் பட்டியல் மதிப்பாய்வு செய்யப் படும்” என அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ வுக்குப் பின்னர் சிறுவன் ஷங்குவிற்கு பலரும் பிரியாணியும், சிக்கனும் வாங்கித் தருவதாக கூறி னர் என சிறுவனின் தாய் சமூக வலைத்தளங் களில் குறிப்பிட்டுள்ளார்.

இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு குவியும் பாராட்டு

குறிப்பாக ஒரு சிறுவனின் சாதாரண அடம் பிடிக்கும் கோரிக்கையை கூட மதிப்பாய்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் செயல்பாட்டிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.