tamilnadu

img

அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுமிக்கு நவீன சிகிச்சை மூலம் கல்லீரல் நீர்க்கட்டி அகற்றம்

அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுமிக்கு
நவீன சிகிச்சை மூலம் கல்லீரல் நீர்க்கட்டி அகற்றம்

தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவ மனையில் 6 வயது சிறுமிக்கு நவீன சிகிச்சை  மூலம் கல்லீரலில் இருந்த நீர்க்கட்டி அகற்றப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர்  (பொ) சி.பாலசுப்பிரமணியன் செவ்வாய்க் கிழமை தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே யுள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் 6  வயது பெண் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால், அவதிப்பட்ட  அச்சிறுமி தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட போது, கல்லீரலில் நீர் கட்டி இருப்பது தெரிய  வந்தது. இம்மருத்துவமனையில் மார்ச் 14 ஆம் தேதி உள்நோயாளியாக சேர்க்கப்பட்ட இச்சிறுமிக்கு 20 ஆம் தேதி குழந்தைகள் நலப்பிரிவு அறுவை சிகிச்சை துறைத் தலை வர் முகமது ஷாகீர், மருத்துவர்கள் குமரன், சாய்பிரபா, செவிலியர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். அப்போது, வயிற்றைக் கிழிக்காமல், லேப்ராஸ்கோபி மூலம் 3 துளைகள் இடப்பட்டு, கல்லீரலில் இருந்த 150 கிராம் எடை கொண்ட நீர் கட்டி அகற்றப்பட்டது. அக்கட்டியை மருத்துவப் பரிசோதனைக் காக ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பியு உள்ளோம். இக்கட்டியை அகற்றாமல் இருந் தால், சிறுமிக்கு மஞ்சள் காமாலையும், புற்று நோயும் வந்திருக்கும். இந்த நவீன சிகிச்சை  தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீடு  திட்டத்தின் மூலம் இலவசமாக மேற்கொள்ளப் பட்டது. இதே சிகிச்சைக்கு தனியார் மருத்துவ மனையில் ரூ. 7 லட்சம் செலவாகும்.  டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இச்சிகிச்சை முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறுமிக்கு வலி ஏதும் இல்லாமல், நலமாக இருப்பதால் வீடு திரும்பினார்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது நிலைய மருத்துவ அலுவலர் அமுதவடிவு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.